புற்றுநோய் பாதிப்பின் அபாயத்தை வெளிப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள் சில இருக்கின்றன. அவை என்னவெல்லாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 21, 2024
Hindustan Times Tamil
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொண்டால் நோய் பாதிப்புக்கு எதிராக போராடலாம்
இந்த அறிகுறிகள் புரிந்து கொண்டு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பின் தீவிரத்தை தடுத்துவிடலாம்
தொற்று பாதிப்புகளுடன், அடிக்கடி காய்ச்சல் மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படுவது. குறிப்பாக இரவு நேரத்தில் வியர்வை, விளக்கமுடியாக உடல் நல பாதிப்பு போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும்
விளக்கமுடியாத அளவில் திடீரென உடல் எடை குறைவது கணையம், வயிறு, நுரையிரல் புற்றுநோய் பாதிப்புக்கான அறிகுறியாகும்
தொடர்ச்சியான புண்கள், வாய் அல்லது தொண்டைக்குள் ஆறாத வெள்ளைத் திட்டுகள், குறிப்பாக புகையிலை மற்றும் மதுபானம் அருந்துபவர்களுக்கு ஏற்படுவது வாய்வழி புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாகும்
சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுதல், சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது புற்றுநோய் பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்
நெஞ்சு எரிச்சல் அல்லது அஜீரணம் போன்ற அசாதாரண அறிகுறிகள், பெருங்குடல் அல்லது வயிற்று புற்றுநோய் போன்ற செரிமான புற்றுநோயை குறிக்கலாம்