சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளால் சிரமமா.. இனி இந்த மாதிரி ஸ்வீட் ரைஸ் செய்து கொடுங்க.. சத்தானது கூட
உங்கள் வீட்டில் குழந்தைகள் சாப்பிட டம் பிடுத்தால் இந்த பெயரை கேட்ட உடனே ஆசையா வருவாங்ன. இது ஒரு இனிப்பு உணவு. இது சுவையானது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
இன்றைய தாய்மார்களுக்கு மிகப்பெரிய டாஸ்க் என்பது குழந்தைகளை சாப்பிட வைப்பது எனலாம். சாப்பாட்டை பார்த்தாலோ ஓட ஆரம்பிக்கும் குழந்தைகளையும் விரும்பி ஆசையா சாப்பிட வைப்பது குறித்து யோசிக்கிறீங்களா. உடனே இந்த ஸ்வீட் ரைஸ் ரெசிபியை டிரை பண்ணுங்க. குழந்தைகள் தங்கள் விருப்பப்படி சமைத்தால் சாப்பிட விரும்புவார்கள். இங்கு இனிப்பு சாதம் செய்முறையை கொடுத்துள்ளோம். இது மிகவும் சுவையானது. இதில் சர்க்கரையுடன் தேங்காய் சேர்க்கிறோம். எனவே இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சர்க்கரை குறைவாகவும், தேங்காய் அதிகமாகவும் சேர்க்க வேண்டும். இது கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு. இதை சிறிது நேரத்திலேயே சமைத்து முடித்து விடலாம். இந்த ரெசிபியை உலர் பழங்களை வைத்து சமைப்பதும் குழந்தைகளுக்கு அதிக பலத்தை தரும். குழந்தைகளும் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள். இந்த ஸ்வீட் ரைஸ் ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்வீட் ரைஸ் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு கப்
பால் - ஒரு கப்
குங்குமப்பூ - இரண்டு இதழ்கள்
சர்க்கரை - கால் கப்
தேங்காய் பால் - ஒரு கப்
துருவிய தேங்காய் - நான்கு ஸ்பூன்
உலர் பழங்கள் - கைபிடி
நெய் - இரண்டு ஸ்பூன்
ஸ்வீட் ரைஸ் ரெசிபி
1. ஸ்வீட் ரைஸ் சமைக்க, ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
2. மேலும் அவற்றை சமைக்க போதுமான தேங்காய் பால் சேர்க்கவும். குறைந்த தீயில் அவற்றை அரிசியை வேக வைக்க வேண்டும்.
3. அரிசி வேகும் போது, குங்குமப்பூ இதழ்கள் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
4. மேலும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
5. குங்குமப்பூ அரிசியை வெளிர் மஞ்சள் நிறமாக மாற்றுகிறது.
6. அரிசி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
7. மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.
9. நெய்யில் வறுத்த பொருட்களை ஏற்கனவே வேக வைத்த சாதத்தில் சேர்த்து கலக்க வேண்டும்.
10. சுவையான இனிப்பு சாதம் தயாரானவுடனேயே அதன் சுவை அமோகமாக இருக்கும்.
11. உங்களுக்கு சர்க்கரை பிடிக்கவில்லை என்றால் வெல்லத்தையும் சேர்க்கலாம்.
12. தேங்காய் பாலில் செய்யப்படும் இந்த இனிப்பான சாதம் வாயில் நீர் ஊறவைக்கும்.
13. வெல்லம் சேர்த்து செய்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை போன்ற பல சத்தான உணவுகளையும் சேர்த்துள்ளோம். அதனால் அவை உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் தருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையாவது இதை குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களும் இதை சாப்பிடலாம். தனியாக ஒரு குழம்பே தேவைப்படாது. ஆனால் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் அபாயம் உள்ளவர்கள் அளவாக சாப்பிட வேண்டும். நோயில் தீவிரம் அதிகம் இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி உணவை எடுத்துகொள்வது நல்லது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்