Benefits of Pista : கண் பார்வைத் திறனை கூராக்குகிறது; மூளைக்கும் நல்லது! தினமும் 12 பிஸ்தாக்கள் என்ன செய்கிறது?
Benefits of Pista : கண் பார்வைத் திறனை கூராக்கி, மூளைக்கும் பல நன்மைகளை அள்ளித்தரும், தினமும் 12 பிஸ்தாக்கள் என்ன செய்கிறது?
தினமும் 12 பிஸ்தாக்களை சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
பிஸ்தாவில் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. புரதம், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அனைத்தும் நிறைந்தது. தினமும் 12 பிஸ்தாக்களை சாப்பிடுவதால், தினமும் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் பி6 உள்ளது.
இது மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
இதய ஆரோக்கியம்
பிஸ்தாக்களில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளது. குறிப்பாக இதில் மோனோசாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்புகள் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
எடை மேலாண்மை
கலோரிகள் நிறைந்த உணவாக இருந்தாலும், பிஸ்தாக்கள் உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் அதிக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படும்.
ரத்த அழுத்த கட்டுப்பாடு
பிஸ்தாக்கள் லோ கிளைசமிக் இன்டக்ஸ் உணவுப்பட்டியலில் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் மற்றம் ஆரோக்கிய கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. பிஸ்தாக்கள் சாப்பிடுவது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு சிற்றுண்டியாக உள்ளது. சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கும் இது உதவுகிறது.
கண் ஆரோக்கியம்
பிஸ்தாக்களில் லியூட்டின், சியாக்ஸான்தின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண்களை பாதுகாக்க உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் கண்களை ப்ளு லைட்கள் வெளியிடும் வெளிச்சத்தில் இருந்து காக்க உதவுகிறது. இது வயோதிகம் தொடர்பான கண்புரை உள்ளிட்ட பிரச்னைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
பிஸ்தாக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பிஸ்தாக்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை இருக்கச் செய்கிறது. குடல் இயக்கத்தையும் அதிகரிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
பிஸ்தாவில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இந்த குணங்கள் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. இதய நோய்கள் மற்றும் ஆர்த்ரிட்டிஸ் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
பிஸ்தாவில் வைட்டமின் பி6 மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பிஸ்தாக்களை நாம் வழக்கமாக சாப்பிடும்போது, அது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. நரம்பியல் நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.
டாபிக்ஸ்