தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Alcohol Addiction: குடியை குட்டிச்சுவராக்கும் மது.. இத நிப்பாட்ட வழியே இல்லையா.. - மருத்துவர் கூறும் எளிய டிப்ஸ்கள்!

Alcohol Addiction: குடியை குட்டிச்சுவராக்கும் மது.. இத நிப்பாட்ட வழியே இல்லையா.. - மருத்துவர் கூறும் எளிய டிப்ஸ்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 28, 2023 11:33 AM IST

இப்படி பார்க்கும் பொழுது முதல் வாரத்தில் நீங்கள் மூன்று தினமும் மூன்று லார்ஜ்கள் குடித்தால் அடுத்த வாரத்தில் அதை இரண்டு லாட்ஜ்களாக குறைக்க வேண்டும்.

மது பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிகள்!
மது பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் கொடுமை என்னவென்றால், இதில் வயது வந்த பிஞ்சுகளும் அடக்கம். ஆரம்பத்தில் விளையாட்டிற்காக சின்னதாக ஒரு பெக் என்று தொடங்குவது பின்னாளில் நம் முழு உழைப்பையும் பதம் பார்த்து விடுகிறது. இன்று பல பேர் தெரியாமல் வந்து இந்த குடிப்பழக்கத்தில் மாட்டிக்கொண்டு அதனை கைவிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான கட்டுரைதான் இது. 

இது குறித்து மருத்துவர் கார்த்திகேயன் பேசும் போது,“மதுவை நீண்ட காலம் குடித்து கொண்டிருப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தக்கூடாது. மெது மெதுவாகத்தான் நிறுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் தினமும் 180 மிலி மது அருந்துபவராக இருந்தால், அதை சிலர் 60 60 60 என பிரித்து லார்ஜ்களாக குடிப்பார்கள். இன்னும் சிலர் 30 30 30 30 30 என்ற கணக்கில் பிரித்து ஸ்மால்களாக குடிப்பார்கள்

இப்படி பார்க்கும் பொழுது முதல் வாரத்தில் நீங்கள் மூன்று தினமும் மூன்று லார்ஜ்கள் குடித்தால் அடுத்த வாரத்தில் அதை இரண்டு லாட்ஜ்களாக குறைக்க வேண்டும். 

ஆறு ஸ்மால்களாக எடுத்துக்கொள்பவராக இருந்தால், அடுத்த வாரம் நீங்கள் அதனை ஐந்து ஸ்மால்களாக குறைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் மெது மெதுவாக இன்னும் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். 

இப்படி மெதுவாக செய்யும் பொழுது மட்டும்தான் நம்மிடையே இருக்கக்கூடிய இதர பிரச்சனைகள் பெரிதாகாமல் இருக்கும். ஒருவேளை மதுவுக்கு இன்னும் அதிகப்படியான அடிமையாக இருப்பவர் என்றால் மதுவை குறைக்கும் வீதத்தை இன்னும் குறைத்து முயற்சியை தொடங்கலாம்.

இதெற்கெல்லாம் முன்னதாக இந்த மதுவானது என் வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஆகையால் இதனை நான் கைவிடப் போகிறேன் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உத்வேகத்தை தரக்கூடிய விஷயங்களிலும் ஈடுபட வேண்டும். 

அதே போல மதுவை குறைக்கும் நடவடிக்கைகளில் மிகவும் கறாராக இருக்க வேண்டும். 

மது அருந்துபவரின் குடும்பமானது நேரம் காலம் கருதி அந்த நபரிடம் பேச வேண்டும். அந்த சமயங்களிலும் வேறு பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல், முழுக்க முழுக்க இந்த மது அருந்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், ஆரோக்கிய குறைபாடுகள், அதனால் ஏற்படும் இன்ன பிற பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வளவு எடுத்துச் சொல்லியும் அந்த நபர் மீண்டும் குடிக்கச் செல்வார். அதை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது என்று கூட சொல்வார்கள். அப்போதும் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சினையின் வீரியத்தை நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த நபர் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியும். அவர் அந்த முயற்சியும் மேற்கொள்ளும் காலத்தில் அவரது குடும்பமானது அவருக்கு உச்ச பட்ச துணைவனாக இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த சமயத்தில் அவருக்கு நாம் பாடம் எடுக்கக் கூடாது, அவரை அவமானப்படுத்தக் கூடாது, அவரை மிரட்டக்கூடாது. அவரின் மீது அக்கறை கொள்ளும் விதமாக பேச வேண்டும். 

சுற்றி எப்போதும் மது அருந்தாத ஆட்களை வைத்துக் கொள்ளுங்கள். 

நன்றாக சாப்பிடுங்கள்,நன்றாகத் தூங்குங்கள் நன்றாக ஆக்டிவாக இருந்து பிடித்த வேலைகளை செய்யுங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள், யோகா செய்யுங்கள்.

மன அழுத்தம் தரக்கூடிய வேலைகளை தவிர்த்து விடுங்கள்

உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துங்கள்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்