தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tirupati Curd Rice: ருசியான திருப்பதி தயிர் சாதம் எப்படி செய்வது?

Tirupati Curd Rice: ருசியான திருப்பதி தயிர் சாதம் எப்படி செய்வது?

Aarthi V HT Tamil
Jul 31, 2023 10:32 AM IST

திருப்பதி தயிர் சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

திருப்பதி தயிர் சாதம்
திருப்பதி தயிர் சாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

அரிசி - 250 கிராம்

பால் - 1/2 கப்

கெட்டித் தயிர் - ஒன்றரை கப்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

முந்திரி - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசியை ஒரு 15 நிமிடம் ஊற வைத்து குக்கரில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு 5 விசில்கள் வரும் வரை காத்திருக்க ப்
  • சாதம் வெந்த பின்பு குக்கரை திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை கிளறி அதை மென்மையாக மசிக்கவும்.
  • மசித்த சாதத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு, அரை கப் காய்ச்சி ஆறிய பால் ஊற்றி நன்கு கலந்துவிட வேண்டும். 
  • அதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் பின்பு இதில் கெட்டித் தயிர் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கிட்டத்தட்ட வெண்ணெய் பதத்தில் சாதம் வந்து இருக்கும்.
  •  ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் ஊற்றி அது சூடாகும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, பெருங்காயம்முந்திரி உடைத்து  போட்டு நன்கு பொரிய தாளிக்கவும்.
  • தாளிப்பை தயிர் சாதத்தில் கொட்டி கிளறினால் ஐஸ்க்ரீம் போல குழைவான ருசியில் திருப்பதி தயிர் சாதம் தயார்
  • இதில் இஞ்சி, வரமிளகாய், மாதுளை, திராட்சை, மாங்காய் இதெல்லாம் சேர்த்துவிட கூடாது. அப்படி செய்தால் திருப்பதி தயிர் சாதத்தின் பாரம்பரிய ருசியே மாறிவிடும்.
  • இந்த திருப்பதி தயிர் சாதம் அனைத்து வகையான ஊறுகாய்களும் நல்ல காம்போவாக இருக்கும். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்