Diet Cookie Recipe: எடையை குறைக்கும் டயட் ஓட்ஸ் வாழைப்பழ குக்கீஸ் செய்வது எப்படி? ஈஸி ரெசிபி தெரிஞ்சுக்கோங்க!
Diet Cookie Recipe: உடல் எடையைக் குறைக்க பல வித உணவுகள் வழக்கதில் உள்ளன. அதிமான சாயஸ் இருப்பதாலேயே எதை தேர்வு செய்ய வேண்டும் என்ன தெளிவாக தெரிவதில்லை. டயட் உணவுகளில் முக்கியமான ஒன்றுதான் ஓட்ஸ்.
உலகளாவிய பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் ஆகிவிட்டது. மேலும் மாறிவரும் வாழ்க்கை முறைகளால் உணவு பழக்க வழக்கங்களும் மாறி விட்டது. உடல் பருமனை குறைக்க பல விதமான டயட் பிளான்கள் நடைமுறையில் உள்ளன. அனைத்த விதமான டயட் பிளானிலும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க பல வித உணவுகள் வழக்கதில் உள்ளன. அதிமான சாயஸ் இருப்பதாலேயே எதை தேர்வு செய்ய வேண்டும் என்ன தெளிவாக தெரிவதில்லை. டயட் உணவுகளில் முக்கியமான ஒன்றுதான் ஓட்ஸ். இத்தகைய ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஈஸியான முறையில் குக்கீஸ் செய்யலாம். இதற்கான எளிய செயல் முறையை காண்போம்.
உடல் பருமனை குறைக்க அந்த நாள் தொடங்கும் போதே உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிக்க உணவு முறைகள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் என ஆரோக்கிய மயமாக மாற்ற வேண்டும். டயட் பிளான்களில் முக்கியமான, தவிர்க்க முடியாத உணவாக ஓட்ஸ் இருந்து வருகிறது. இதில் அதிகப்படியான எனர்ஜி இருப்பதால், நமக்கு தேவையான சக்தியை இது குறைந்த கலோரியில் தருகிறது.
வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ் செய்யத் தேவையான பொருட்கள்
3 நன்கு கனிந்த வாழைப்பழம், அரை கப் ஓட்ஸ், அரை கப் உலர்ந்த திராட்சை, 2 டீஸ்பூன் பட்டை பொடி,2 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான பொருட்களை தேர்வு செய்யும் போது, கேட்டுப் போகாதவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த குக்கிஸ் செய்ய குறைந்த கால நேரமே தேவை படும். மாலை நேரம் ஸ்நாக்ஸ் ஆக இதனை செய்து சாப்பிடலாம். அதிகம் குக்கிஸ் விரும்பி சாப்பிடும் பிள்ளைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.
செயல்முறை
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ள வேண்டும். வேண்டும் என்றால் மிக்ஸியில் போட்டு ஒரு முறை மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் நைசாக இல்லாமல், அரை பாதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். குக்கீஸ் மாவு பாதம் வரும் வரை நன்கு கிளற வேண்டும்.
பின்னர் அதில் உலர்ந்த திராட்சை, சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும். தயாரான குக்கீஸ் கலவையில் சிறிது பேக்கிங் சோடா போடவும். இதனால் குக்கீஸ் நன்கு உப்பி வரும். பின்னர் பேக்கிங் ட்ரே எடுத்து அதில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்க வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கரண்டியால் எடுத்து பட்டர் பேப்பர் மீது சிறு சிறு பகுதிகளாக வைக்கவும்.
அந்த கரண்டியை வைத்து அதிகன் மீது அழுத்தம் கொடுத்து பிஸ்கட் போல வைக்கவும். அதன் மேல் சாக்கோ சிப்ஸ் தூவி 180 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் மைக்ரோ ஓவனில் வைத்து வேக விடவும். 15 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான குக்கீஸ் ரெடி. ஆறியவுடன் எடுத்து சாப்பிடலாம். டயட் காலங்களில் அதிக கட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் இந்த குக்கீஸ்களை சாப்பிடலாம்.
டாபிக்ஸ்