தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pattani Kuruma: ருசியாக பட்டாணி குருமா செய்வது எப்படி?

Pattani Kuruma: ருசியாக பட்டாணி குருமா செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Sep 24, 2023 11:46 AM IST

எளிமையான முறையில் பட்டாணி குருமா செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

எளிமையாக ருசியாக பட்டாணி குருமா செய்வது எப்படி?
எளிமையாக ருசியாக பட்டாணி குருமா செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்: 

நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்,

சோம்பு - 1 ஸ்பூன்,

பெரிய வெங்காயம் - மூன்று,

தக்காளி  - இரண்டு, 

பச்சை மிளகாய் - 5,

இஞ்சி - பெரிய துண்டு, 

வெள்ளைப்பூண்டு - பத்து பற்கள்,

தேங்காய் - கால் முடி, 

பிரியாணி இலை - 1,

பட்டை - 1, 

ஏலக்காய் - ஒன்று, 

கிராம்பு - 2, 

சீரகம் - அரை ஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு,

பட்டாணி - 200 கிராம்,

கரம் மசாலா - அரை ஸ்பூன்,

மல்லித்தூள் - அரை ஸ்பூன்,

மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன், 

மஞ்சள் தூள் - ஒரு கால் ஸ்பூன்

செய்முறை: ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக்கொள்ளவும். சோம்பு பொன்னிறமாக வந்ததும், பெரிய வெங்காயம் மூன்று எடுத்து பெரிதுபெரிதாகவே கட் செய்துகொள்ளவும். அதன்பின்,அதனை கடாயில் போட்டு வதக்கிக்கொள்ளவும். பின் இரண்டு பெரிய தக்காளியை பெரிய சைஸாகவே கட் செய்து கொள்ளவும். 5 பச்சை மிளகாயினை அதில் சேர்த்து வதக்கவும். பெரிய துண்டு இஞ்சியினை எடுத்து வாணலியில் கட் செய்துபோட்டுக்கொள்ளவும். பத்து வெள்ளைப்பூண்டு இதழ்களை கடாயில் சேர்த்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ளவும். அதனையடுத்து, கால் முடி தேங்காயை சிறு துண்டுகளாக்கி அந்த கலவையில் சேர்த்துக்கொள்ளவும். பின் அனைத்தையும் வதக்கிக்கொள்ளவும். அதனையடுத்து அவற்றை இறக்கிவிட்டு, சூடு தணிந்தபின், மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின் வேறொரு ஒரு கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். அதன்பின், ஒருபிரியாணி இலை, ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், 2 கிராம்பு, அரை ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றைப்போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். பின், நாம் மிக்ஸியில் அரைத்துவைத்த பேஸ்டை சேர்த்துக்கொள்ளவும்.

அதன்பின், 200 கிராம் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும். கரம் மசாலா அரை ஸ்பூன், மல்லித்தூள் அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், பின் இவை அனைத்தையும் நன்கு கிளறிக்கொள்ளவும். அதன்பின் மசாலா மூடும்வரை, நீர் சேர்க்கவேண்டும். அதன்பின் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள். கம கம பட்டாணி குருமா தயார்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

WhatsApp channel

டாபிக்ஸ்