தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Flower Poriyal : வாழைப்பூவில் பொரியல் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்!

Banana Flower Poriyal : வாழைப்பூவில் பொரியல் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்!

Divya Sekar HT Tamil
Aug 23, 2023 10:58 AM IST

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இதில் வாழைப்பூவில் பொரியல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வாழைப்பூவில் பொரியல்
வாழைப்பூவில் பொரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வாழைப்பூ

எண்ணெய்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 துளிர்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

ஊறவைத்த துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன்

உப்பு

தண்ணீர்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது நறுக்கிய வாழைப்பூவை உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கவும். 

நன்கு வதங்கிய பிறகு அதன் உடன் ஊறவைத்த துவரம் பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கி விடுங்கள். இப்போது சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி. இதனை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

வாழைப்பூவை பயன்படுத்தி நாம் பல ரெசிபிக்களை செய்ய முடியும். வாழைப்பூவில் குறைந்தளவு கலோரிகளே உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. இதில் நிறைய மினரல்கள் உள்ளது. இதனால் வாழைப்பூவில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. வாழைப்பூ, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. நீரிழிவு மற்றும் அனீமியாவை தடுக்கி உதவுகிறது.

நன்றி : பிரவிஸ் கிச்சன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்