ஹோம் மேக்கர்களே உங்களுக்காகவே இந்தப் பயனுள்ள 15 கிச்சன் டிப்ஸ்!
இல்லத்தரசிகளுக்காக பயனுள்ள 15 வீட்டுக் குறிப்புகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
சமையல்கட்டில் ஹார்டாக வேலை செய்வதைவிட்டுவிட்டு ஸ்மார்ட்டாக வேலை செய்தால் அலுப்பு தெரியாது. அதுமட்டுமல்லாமல் நோய்த்தொற்றுகள், பூச்சிகள் அண்டாது. உணவுப் பொருட்செலவை நிறைய மிச்சப்படுத்தலாம். சிறந்த டிப்ஸ்கள் மூலம் சுவையாகவும் சமைக்கலாம். கீழே தரப்பட்டுள்ள டிப்ஸ்களை படித்து பலனடையுங்கள்.
தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறுநாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியினால் சுழற்றிக் கொண்டிருந்தால் ஐந்தே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு வரும் அதை சேகரித்து வெண்ணெய் எடுக்கலாம்.
பால் அல்லது கஞ்சி சூடு ஆறினால் மேலே ஏடு படியும். குழந்தைகளுக்கும் இன்னும் பலருக்கும் இப்படி ஏடு படிவது பிடிக்காது. எனவே அதில் லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் நிறைய எண்ணெய் இருக்கிறதா? பிரச்னையே இல்லை. கொஞ்சம் கொள்ளு மாவை காய்கறியில் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.
பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.
ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
காய்கறியை நறுக்கும் கட்டிங் போர்ட்டை சுத்தம் செய்ய எலுமிச்சையில் உப்பைத் தடவி போர்ட்டை நன்றாக தேய்க்கவும். சிறிது நேரத்தில் கரைகள் எல்லாம் அகன்றுவிடும்.
கொழுக்கட்டைக்கு மாவு கிளறும் போது நீருடன் ஒரு கரண்டி பால்விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்க உதவும்.
வடாமுடன் சிறிது கறிவேபிலையை அறைத்துக் கலந்து செய்தால் வடாம் தனி ருசியுடன் மணமாக இருக்கும்.
பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவினால் சூப்பின் சுவையை அதிகரிக்கலாம்.
பேக்கிங் சோடாவை ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து கரைகளை நீக்கலாம்.
குழாய்களை பளிச்சென்று மின்னச் செய்ய பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தேய்க்கவும்.
பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்.
குழந்தைகளின் துணிகளை டிடெர்ஜெண்ட் பயன்படுத்தமல் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
பேக்கிங் சோடாவை பற்களின் மேல் தெய்த்தால் பற்களை வெண்மைப்படுத்தலாம்.