தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Made Bournvita : கெமிக்கல் ஃப்ரி போன்வீட்டா - வீட்டிலே இவ்ளோ ஈசியா செய்ய முடியமா? எப்படி?

Home Made Bournvita : கெமிக்கல் ஃப்ரி போன்வீட்டா - வீட்டிலே இவ்ளோ ஈசியா செய்ய முடியமா? எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 13, 2023 01:45 PM IST

Home Made Bournvita : மனிதன் இயங்க ஆற்றல் மற்றும் அறிவு இரண்டும்தான் தேவையாவை. ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் இருந்து மட்டும்தான் ஆற்றல் கிடைக்கிறது. எனவே உணவில் எப்போதும் ஆரோக்கியமற்வற்றை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.

வீட்டிலே இவ்ளோ ஈசியா போன்வீட்டா செய்ய முடியுமா?
வீட்டிலே இவ்ளோ ஈசியா போன்வீட்டா செய்ய முடியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு 4 பேருக்கு ஒரு வேளைக்கு பயன்படும். உங்களுக்கு தேவையென்றால் அதிகம் செய்து, ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பாதாம் – 10 (ஊறவைத்து தோல் நீக்கியும் எடுத்துக்கொள்ளலாம்)

பிஸ்தா – 10

வால்நட்ஸ் – 5

ஓட்ஸ் அல்லது ராகி மாவு – 2 ஸ்பூன்

கோகோ பவுடர் – 2 ஸ்பூன்

பேரிட்சை பழ பவுடர் – 2 ஸ்பூன்

வெல்லம் பொடித்தது – 4 ஸ்பூன் (உங்களுக்கு இனிப்பு சுவை பிடிக்கும் எனில் நீங்கள் கூடுதலாக வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். வெல்லத்துக்கு பதில், நாட்டுச்சர்க்கரை, கரும்புச்சர்க்கரை, வெள்ளை சர்க்கரை என எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்)

பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. இருமலுக்கும் மருந்தாகும்.

செய்முறை

பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு ஓட்ஸ் அல்லது ராகி மாவை அந்த சூட்டிலே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை நன்றாக ஆறவைத்துவிட்டு, ஒரு மிக்ஸிஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பவுலில் சேர்த்து, கோகோ பவுடர், பேரிச்சை பழப்பொடி, வெல்லம் பொடித்தது (வெல்லத்துக்கு பதிலாக என்ன சேர்த்தாலும் அதையும் நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்) ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

பாலை சூடாக காய்ச்சி அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து இந்த வீட்டிலேயே தயாரித்த போன்வீட்டாவை கலந்து, இனிப்பு சுவைக்கு ஏற்ப கூடுதலாக சர்க்கரை, தேன் என எது வேண்டுமானாலும் கலந்து பருகலாம்.

இதனுடன், மேலும் பல நட்ஸ்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது இவையே போதுமானது. இதனுடன் கொஞ்சம் சாக்கோ சிப்ஸ் அல்லது சாக்லேட் சிரப் சேர்த்தால் சாக்லேட் போன்வீட்டா கிடைத்துவிடும்.

இந்த போன்வீட்டா உடலுக்கு ஆரோக்கியமானது. கடையில் வாங்கும் அனைத்து டப்பா மற்றும் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட இதுபோது ரெடிமேட் பொடிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையாகும். எனவே குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் இதை தயாரிப்பது எப்படி என்று அவர்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால், அவர்களே இவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டுக்கொள்வார்கள்.

மனிதன் இயங்க ஆற்றல் மற்றும் அறிவு இரண்டும்தான் தேவையாவை. ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் இருந்து மட்டும்தான் ஆற்றல் கிடைக்கிறது. எனவே உணவில் எப்போதும் ஆரோக்கியமற்வற்றை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்