Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் உடலில் இத்தனை மாற்றங்களா?
Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் உடலில் இத்தனை மாற்றங்களா?
3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? பொதுவாகவே எள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் ஒரு தானியம்.
எள்ளில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் அதிகமாக உள்ளது. இவை மட்டுமின்றி மெக்னீசியச்சத்துக்களும் நிறைந்தது. இத்தனை சத்துக்கள் அடங்கிய எள்ளை நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது அதன் மருத்துவ பலன்கள் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கிறது.
பொது எந்த ஒரு உணவு தானியத்தையும் நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது, அதன் மருத்துவ குணங்கள் நமக்கு இரட்டிப்பாகக் கிடைக்கும். நாம் பரவலாக தேனில் ஊறிய நெல்லியை சாப்பிடுகிறோம்.
தேவையான பொருட்கள்
ஈரமில்லாத கண்ணாடி பாட்டில் – 1
எள் – 4 ஸ்பூன்
காய்ந்த எள் இதை வறுக்க வேண்டாம்
தேன் – 4 ஸ்பூன்
சுத்தமான தேன் எடுத்துக்கொள்ள வேண்டும்
செய்முறை
காய்ந்த பாட்டிலில் எள்ளை சேர்த்துவிட்டு, அதில் தேனை ஊற்றி ஈரமில்லாத ஸ்பூன வைத்து கிளறிவிடவேண்டும்.
எந்த ஸ்டெப்பிலும் தண்ணீர் பட்டுவிடக்கூடாது. ஏனெனில் தண்ணீர் பட்டால் எள்ளில் பூஞ்ஜை வந்துவிடும். எனவே பயன்படுத்தும் அனைத்திலும் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இதை அப்படியே 3 நாட்கள் ஊறட்டும். எள் ஊற ஊற அடியில் தங்கும்.
மூன்று நாட்களுக்குப்பின்னர், ஒரு ஸ்பூன் எடுத்து, காலையில் உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து சாப்பிடவேண்டும் அல்லது மதிய உணவுக்குப்பின்னரும் சாப்பிட்டுக்கொள்ளலாம் அல்லது இடைவேளையில் எப்போதும் சாப்பிடலாம். இரவு உறங்கச்செல்லும் முன்னும், காலையில் வெறும் வயிற்றிலும் சாப்பிடக்கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் மட்டும்தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. ஒரு நாளைக்கு 5 கிராம் எள் எடுத்துக்கொள்ளலாம்.
கர்ப்பத்துக்கு முயற்சிப்பவர்கள் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இதை தினமும் சாப்பிட்டால், இரும்புச்சத்து, கால்சியம் குறைபாடு காரணமாக இடுப்பு வலி, கை-கால் வலி, மூட்டு வலி ஆகியவற்றால் சிறிய வயதிலேயே அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். எலும்பை இரும்பாக்கும்.
உடல் சோர்வு, உடல் வலி பிரச்னைகள் வராது. இளமைத்தோற்றம் தரும். உடல் அழகை பராமரிக்க உதவும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் காத்து, முதுமையை தள்ளிப்போடும். சருமத்தில் கொலஜென் உற்பத்திக்கு ஊக்குவித்து சரும பிரச்னைகளை சரிசெய்யும்.
சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும். இதனால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பொலிவான தோற்றத்துடன் இருக்க உதவும்.
இது மலச்சிக்கலை சரிசெய்யும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதில் உள்ள காப்பர் சத்து, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சத்துக்கள் சென்றடைவதற்கு உதவுகிறது.
போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு, அவர்களின் உடல் சுத்தமாகிறது.
மூளை சுறுசுறுப்பாக்கும், உடல், மனம் அமைதியடையும். வயோதிகர்களுக்கு ஏற்படும் சிறுநீர் பிரச்னைகளை சரிசெய்யும். எள்ளில் உள்ள மெக்னீசியச்சத்துக்கள் ரத்தத்தில் ரத்த அழுத்த அளவை குறைக்க உதவும். எள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை வெளியேற்றும்.
எள்ளில் உள்ள ஃபைட்டோஸ்டெரால் என்ற உட்பொருள் கெட்ட கொழுப்பு உற்பத்தியை குறைக்கும். இது கருப்பு எள்ளில் அதிகம் உள்ளது. எள்ளில் உள்ள சிங்க் சத்துக்கள், நமது உடலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்கள் உருவாகவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் பயன்படுக்கிறது.
எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் நமது இதய ஆரோக்கியத்துக்கு உதவும். பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்கிறது. வெள்ளை நிற எள்ளைவிட கறுப்பு நிற எள் மிகவும் நல்லது. கருப்புநிற எள்ளை தேனில் ஊறவைக்கும் முன் சூடான கடாயில் சேர்த்து சிறிது நேரம் வறுத்துவிட்டு, நன்றாக ஆறவைத்து பயன்படுத்த வேண்டும்.
கருப்பு எள் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்னையை சரிசெய்யும். முடி உதிர்வை குறைக்கும். இளநரையை தள்ளிப்போடும்.
நல்லெண்ணெயை தேய்த்து குளிப்பதும் உடலுக்கு நல்லது. இதை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
டாபிக்ஸ்