Healthy Breakfast : மலச்சிக்கலைப் போக்கும் காலை உணவு! ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது!
Healthy Breakfast : மலச்சிக்கலைப் போக்கும் காலை உணவு! ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது!
தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
புழுங்கல் அரிசி – கால் கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை
கம்பை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் போட்டு தனித்தனியாக நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவேண்டும். கிரைண்டரிலும் அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.
இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், கம்பு இட்லி தயார்.
அல்லது
தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அதில் தோசையாக ஊற்றி தோசையாகவும் செய்யலாம்.
(தோசை மட்டுமே செய்ய விரும்பினால் புழுங்கல் அரிசிக்கு பதில் பச்சரிசி சேர்த்துக்கொள்ளலாம்)
சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி வேகவிடவும். கம்பு இட்லி மற்றும் தோசை தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், வெஜ், நான் வெஜ் கிரேவிகள், மீன் குழம்பு என அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும். சட்னி, சாம்பாரைவிட கிரேவிகள் நன்றாக பொருந்தும்.
கம்பின் நன்மைகள்
100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.
கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.
சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது – இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.
அல்சர் மற்றும்அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.
சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்தை வழங்குகிறது – சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது. இதை ராஜ்மா, பாசிபருப்பு, கொண்டடைக்கடலை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.
கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.
ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.
உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.
குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும்
தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்