Soaked Raisins: ‘கண் முதல் எலும்பு வரை..’ - ஊற வைத்த திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா?
ஊற வைத்த உலர் திராட்சையின் பயன்களை இங்கு பார்க்கலாம்.
உலர் திராட்சையில் இருக்கக்கூடிய நார்ச்சத்து ஜீரணத்திற்கு பெரும் உதவியாக இருக்கிறது. கூடவே, மலச்சிக்கல் உருவாவதையும் தடுக்கிறது.
உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால், இந்த திராட்சைகளை சாப்பிடும் போது இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. இரும்புச்சத்தை கிரகிக்கும் செயல்முறையையும் ஊக்குவிக்கிறது. அதே போல இரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.
உலர் திராட்சையில் பொட்டாசியம் சத்து இருக்கிறது. இது இரத்த அழுத்ததை சீராக்கி, இருதய நலனை பாதுகாக்கிறது.
உலர் திராட்சையில் கால்சியம் சத்தும் அடங்கி இருக்கிறது. இந்த சத்து நமது எலும்பு ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இதில் ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸை சீரான தன்மையில் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக பயன்படும். எடைகுறைப்பு செயல்முறையிலும் உலர் திராட்சைகளை பயன்படுத்தலாம்.
உலர் திராட்சை உடலின் இரத்த சர்க்கரை அளவை சீரான வகையில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது. இவை கண்கள் நலத்திற்கும் இவை பயன்படுகின்றன.
வாயில் சுரக்கும் உமிழ் நீர் உற்பத்தியை தூண்டுகிறது. இதன் மூலம் வாயில் உள்ள பாகங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
காலையில் எந்த ட்ரை ஃப்ரூட் எடுக்க வேண்டும் என்பதையும் இங்கு பார்க்கலாம்
ஆரோக்கியமும், கட்டமைப்பான உடற்பாங்குடன் இருப்பது இப்போதெல்லாம் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. எனவே காலையில் எந்த உணவை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அதுதான் அன்றைய நாள் முழுவதற்குமான சக்தியை கொடுக்கிறது.
எனவே காலை நீங்கள் சாப்பிடும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் அவசியம். காலையில் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகளுள் ட்ரை ஃப்ரூட்ஸ் முக்கியமாக உள்ளது. ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
எனவே நீங்கள் காலையில் எதுபோன்ற ட்ரை ஃப்ரூட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பாதாம்
பாதாமில் புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவற்றை காலையில் எடுத்துக்கொள்வது நல்லது. அது கொழுப்பை குறைக்க, ரத்த அழுத்தத்தை குறைக்க மற்றும் மூளையின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்க காலையிலே எடுத்துக்கொள்வது நல்லது.
இதை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் பளபளக்கும் சருமத்தைப்பெற முடியும். இது எலும்புகளுக்கும் வலு கொடுக்கிறது.
வால்நட்கள்
வால்நட்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்துக்கும். மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கும் உதவுகிறது.
கண் ஆரோக்கியத்துக்கு உதவி, வீக்கம் மற்றும் அழற்சி பாதிப்புகளில் இருந்து உடலை காக்கிறது. மேலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறது.
பேரிச்சை பழம்
இதில் இயற்கை சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாகக்கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது.
அத்திப்பழம்
செரிமானத்துக்கு நன்றாக உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இவை எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய், வீக்கத்தை எதிர்த்து போராடி உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
ஓரிவு ஊற வைக்க வேண்டும்
இந்த ட்ரை ஃப்ருட்களை ஓரிவு ஊறவைக்க வேண்டும். அப்போது அவை எளிதாக செரிமானமாகும். இவற்றை ஊறவிடுவதால் இவற்றில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதில் ஏதேனும் பிரசர்வேடிவ்கள் இருந்தால் அவற்றின் அளவையும் அது குறைக்கிறது.
பாதாம், பிஸ்தா, வால்நட்கள், திராட்சைகள், அத்திப்பழங்கள், பேரிச்சை பழங்கள் மற்றும் ஆப்பிரிகாட்கள் என எதை வேண்டுமானாலும் நீங்கள் ஊறவைத்து கொடுக்கலாம்.
கலந்து உண்ணலாம்
இந்த ட்ரை ஃப்ரூட்களை நீங்கள் காலையில் உண்ணும் உணவுடன் கலந்து சாப்பிடலாம். பருப்பில் அல்லது ஓட்ஸில், தயிரில், சாலட்களில், ஸ்மூத்திகளின் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுடன் கலந்து சாப்பிடலாம். அதிகப்படியான சர்க்கரை குறித்து கவலைவேண்டாம். அவை இயற்கையான சர்க்கரை என்பதால் உங்கள் உடலுக்கு நன்மையே கொடுக்கும்.

டாபிக்ஸ்