தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Avocado Benefits: நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் அவகோடா பழத்தின் பயன்கள்!

Avocado Benefits: நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் அவகோடா பழத்தின் பயன்கள்!

Karthikeyan S HT Tamil
Nov 09, 2023 08:33 AM IST

Avocado Benefits: அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.

அவகோடா பழங்கள்
அவகோடா பழங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு அவகோடாவில் 114 கலோரிகள் மட்டுமே உள்ளது. குறைந்த கிளைசெமிக் சர்க்கரை அளவை கொண்டுள்ளது. நிறைவுறா கொழுப்பை நிறைவுற்ற கொழுப்பாக மாற்றி இன்சுலின் அளவை மேம்படுத்தி டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை இது குறைக்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை கொண்டது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமனாவது தடுக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, பசியைக் குறைக்கிறது. இதனால் உணவு உண்ணும் அளவு குறைகிறது.

இதய நோய், பக்கவாதம், குடல் புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது.

அவகோடா பழத்தில் அதிகளவு நார்சத்து நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம். இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது. 

அவகோடாவை பழச்சாறாகவும், சாலட், ரொட்டி, சூப் ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அவகோடா பழத்தில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆன வைட்டமின் 'ஈ' செல்களை சேதம் மற்றும் வீக்கத்தில் இருந்து பாதுகாத்து, ஒட்டுமொத்த இதய செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை அவகோடா பழத்தை சாப்பிடுவது இருதய சம்பந்தபட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்