Gut Health : குடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் அடித்து வெளியேற்றும் அதிகாலை பானம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gut Health : குடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் அடித்து வெளியேற்றும் அதிகாலை பானம்!

Gut Health : குடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் அடித்து வெளியேற்றும் அதிகாலை பானம்!

Priyadarshini R HT Tamil
Oct 04, 2024 04:24 PM IST

Gut Health : குடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் அடித்து வெளியேற்றும் அதிகாலை பானம். இதை நீங்கள் பருக உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

Gut Health : குடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் அடித்து வெளியேற்றும் அதிகாலை பானம்!
Gut Health : குடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் அடித்து வெளியேற்றும் அதிகாலை பானம்!

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் இரண்டுக்கும் உதவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் – ஒரு ஸ்பூன்

உடலில் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

இஞ்சி – கால் இன்ச்

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. குடலில் உணவு வேகமாக நகர்ந்து செல்ல உதவும்.

சைலியம் ஹஸ்க் எனப்படும் இசப்கோல் – சிறிது

இதில் உள்ள இயற்கை கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை வழக்கப்படுத்தி, உங்கள் குடலை சுத்தம் செய்ய உதவும்.

பாலக்கீரை – சிறிதளவு

எந்த கீரையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கீரைகளில் குளோரோஃபில்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது.

மிளகு – கால் ஸ்பூன்

இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. செரிமான எண்சைம்களை தூண்டுகிறது.

தண்ணீர் – ஒரு டம்ளர்

நீர்ச்சத்து மற்றும் கழிவு நீக்கத்தை ஊக்குவிக்கிறது.

செய்முறை

முதலில் அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். இளஞ்சூடான தண்ணீரில் இஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலந்துவிட்டு, இசப்கோல் சேர்த்து மெதுவாக கலந்துவிடவேண்டும். கீரை மற்றும் மிளகை சேர்த்து மிக்ஸிசுரில் அரைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி தேவைப்பட்டால் மல்லித்தழையைத் தூவி பருகலாம். இல்லாவிட்டால் அப்படியே கூட பருகலாம்.

இதை உடனடியாகப் பருகிவிடவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்ல பலனைத்தரும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம். தினமும் கூட எடுத்துக்கொள்ளலாம். ஒரு இடைவெளியும் தேவை.

உங்கள் குடல் ஆரோக்கியத்தை காக்கும் குறிப்புகள்

நீர்ச்சத்து – உணவில் போதிய அளவு நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவும்.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

உங்கள் உணவில் முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்வது உங்களின செரிமான ஆரோக்கியம் மேம்பட உதவும்.

உடற்பயிற்சி – உடற்பயிற்சி உங்கள் செரிமான மண்டலத்தில் போதிய குடல் இயக்கத்துக்கு உதவும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் – பதப்படுப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் எதை அதிகம் எடுத்தால் உடல் மற்றும் குடலில் நச்சு சேரும்.

மனஅழுத்தம் – மனஅழுத்தமும் குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே மனஅழுத்தத்தைப் போக்க யோகா போன்றவற்றை பழகவேண்டும். இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.