Astro Tips : தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூட வேண்டுமா.. இதோ எலுமிச்சை தீபம்.. எப்போது ஏற்றினால் பலன் கிடைக்கும் பாருங்க!-do you want to get rid of the doshas and get married here is the lemon lamp when you light it you will get results - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூட வேண்டுமா.. இதோ எலுமிச்சை தீபம்.. எப்போது ஏற்றினால் பலன் கிடைக்கும் பாருங்க!

Astro Tips : தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூட வேண்டுமா.. இதோ எலுமிச்சை தீபம்.. எப்போது ஏற்றினால் பலன் கிடைக்கும் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 20, 2024 01:47 PM IST

Astro Tips : எலுமிச்சை தீபத்தை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட சிறப்பு விதிகள் உள்ளன. அது மட்டும் அல்லாமல் எலுமிச்சை தீபத்தை ஏற்றுவது தோசங்களை நீக்கும் என்று கூறப்படுகிறது. எலுமிச்சை தீபத்தை ஏற்றும் முறையையும் எந்த தோஷம் உள்ளவர்கள் ஏற்றுவதால் நன்மை கிடைக்கும் என்பது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

Astro Tips : தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூட வேண்டுமா.. இதோ எலுமிச்சை தீபம்.. எப்போது ஏற்றினால் பலன் கிடைக்கும் பாருங்க!
Astro Tips : தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூட வேண்டுமா.. இதோ எலுமிச்சை தீபம்.. எப்போது ஏற்றினால் பலன் கிடைக்கும் பாருங்க!

தோஷங்களை விரட்டும் தீபம்

பொதுவாக ஜாதகத்தில் , குஜதோஷம், கால சர்ப்ப தோஷம், உள்ளவர்கள் எலுமிச்சை தீபத்தை ஏற்றி உள்ளன்போடு தெய்வத்தை வணங்குவது நன்மை தரும். அதுமட்டும் இல்லாமல் குடும்பம், வியாபாரம் மற்றும் பொருளாதார பிரச்சனை உள்ளவர்களும் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் அன்னை சக்தியின் அருளை பெற முடியும். எதிர்மறை சக்திகளை விரட்டும், திருமணம் கைகூட, கல்வியில் வெற்றி பெற இந்த தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

பார்வதி தேவிக்கு உகந்த தீபம்

பொதுவாக எலுமிச்சை பார்வதி தேவியின் உருவாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் குறிப்பாக பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சையில் மாலை போடப்படுகிறது. ஆனால் இந்த எலுமிச்சை விளக்கை எல்லா இடங்களிலும் ஏற்ற கூடாது.

எந்த தெய்வங்களுக்கு எலுமிச்சை தீபம்.

பொதுவாக பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சை தீப வழிபாடு உகந்தது. மகாலட்சுமி, சரஸ்வதி, துர்கை, போன்ற தெய்வங்களுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் உகந்தது. நீங்கள் வசிக்கும் கிராமத்தின் எல்லைக்குள் இருக்கும் தெய்வங்களுக்கு இந்த எலுமிச்சை தீபம் ஏற்றுவது விஷேசமானது.

எலுமிச்சை தீபம் ஏற்ற உகந்த நேரம்

ராகுகாலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பாக வெள்ளி செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை தீபம் ஏற்றலாம். வெள்ளிக்கிழமையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வெள்ளி என்பது சத்வ குணத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமை ரஜோகுணத்திற்கு விசேஷமாக சொல்லப்படுகிறது.

எப்படி ஏற்ற வேண்டும்

தீபம் ஏற்றுவதற்கு பச்சை எலுமிச்சையை பயன்படுத்த வேண்டும்.முதலில் வெற்றிலை அல்லது தானியங்களை வைத்து அதன் மேல் குங்குமத்தை வைக்க வேண்டும். எலுமிச்சை தீபம் ஏற்ற நெய் அல்லது எண்ணெய் வீட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றும் போது அரளி போன்ற சிவப்பு நிற பூக்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை தீபம் ஏற்றும் போது வெல்லம் கலந்த உணவுகளை பிரசாதமாக அளிப்பது மிகவும் விஷேசமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்