சீமான் எஸ்ஜே சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமார் குடும்பம்! பாராட்டு மழையில் அமரன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சீமான் எஸ்ஜே சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமார் குடும்பம்! பாராட்டு மழையில் அமரன்!

சீமான் எஸ்ஜே சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமார் குடும்பம்! பாராட்டு மழையில் அமரன்!

Suguna Devi P HT Tamil
Nov 05, 2024 10:52 AM IST

கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படாமனது இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது.

சீமான் எஸ்ஜே சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமார் குடும்பம்! பாராட்டு மழையில் அமரன்!
சீமான் எஸ்ஜே சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமார் குடும்பம்! பாராட்டு மழையில் அமரன்!

இதயத்தை பிடிச்சு இழுக்குது - சீமான்

இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அமரன் படத்தை பார்த்துள்ளார். பின்னர் இயக்குனர் மற்றும் சிவகார்த்திகேயனை சந்தித்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்த படம் இதயத்தை பிடிச்சு இழுத்துக்கிடுது. கடைசி 20 நிமிடத்தை பார்த்துட்டு அழுகாம யாரும் வெளியில வரமுடியாது. முகுந்தனாக நடிக்கும் வாய்ப்பு வரலாற்றில் என் தம்பி சிவகார்த்திகேயனுக்கு கிடைத்ததில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும், முகுந்தனாகவே என் தம்பியை பார்த்தேன். அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார்.

சாய் பல்லவி சும்மா ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலே பயங்கரமா நடிப்பாங்க, அப்படியிருக்கையில் இவ்வளவு கனமான கதாபாத்திரம் எனும்போது சிறப்பான பங்களிப்பை கொடுத்து நடிச்சிருக்காங்க. ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறந்த படைப்பை ராஜ்குமார் பெரியசாமி கொடுத்திருக்கிறார். இவருக்குள் இப்படியான திறமை இருக்கிறதா என படத்தை பார்த்து வியந்துபோய்டுவிங்க, அப்படியான படைப்பை கொடுத்திருக்கிறார்.

எங்க அண்ணன் கமல்ஹாசன் தயாரித்ததிலேயே ஆகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒரு படைப்பு, இந்த நாட்டுக்கும் ராணுவ வீரர்களுக்கும் அவர் அர்ப்பணிச்ச படைப்பாகத்தான் இதை பார்க்கிறேன்” என மனம்திறந்து பாராட்டியுள்ளார். மேலும் கமல் ஹாசனிடம் போனில் உரையாடி படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

கட்டாயம் பார்க்கனும் - எஸ்ஜே சூர்யா

இந்நிலையில் 'அமரன்' திரைப்படத்தை பார்த்த நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பாராட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் 'அமரன்'அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் தான் மதுரையில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் நேரம் கிடைத்ததால் கோபுரம் சினிமாஸ் சென்று படத்தை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அமரன் படம் வெளியாகியதில் இருந்து பல பிரபலங்களும் பார்த்து அமரன் படத்தை பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் நடிகர் சிவகுமாரின் குடும்பமும் இணைந்துள்ளது. இதை அடுத்து நடிகர் சிவகுமார் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் அமரன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம் அதன் எக்ஸ தள பதிவில் நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஜோதிகா ஆகியோர் இயக்குனரை சந்தித்த வீடியோவை பகிர்ந்து படத்தை பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்த பதிவில், 'சூர்யா சார், ஜோதிகா மேடம் மற்றும் பழம்பெரும் நடிகர் சிவகுமார் சார் அவர்களின் வருகைக்கு , அமரன் அணிக்கு ஆசிர்வாதத்திற்கும் நன்றி! இந்த தைரியம் மற்றும் அன்பின் கதையை நாங்கள் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களின் ஊக்கம் உண்மையான உத்வேகம். எனக் குறிப்பிட்டு இருந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.