சாம்பார், குழம்புன்னு சாப்பிட்டு போரடிக்கிறதா.. இந்த செட்டிநாடு ஸ்பெஷல் பக்கோடா குழம்பை டிரை பண்ணுங்க.. டேஸ்ட் அசத்தும்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாம்பார், குழம்புன்னு சாப்பிட்டு போரடிக்கிறதா.. இந்த செட்டிநாடு ஸ்பெஷல் பக்கோடா குழம்பை டிரை பண்ணுங்க.. டேஸ்ட் அசத்தும்

சாம்பார், குழம்புன்னு சாப்பிட்டு போரடிக்கிறதா.. இந்த செட்டிநாடு ஸ்பெஷல் பக்கோடா குழம்பை டிரை பண்ணுங்க.. டேஸ்ட் அசத்தும்

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 21, 2024 06:00 AM IST

வீட்டில் காய்கள் எதுவும் இல்லாவிட்டாலும் என்ன குழம்பு வைப்பது என்று குழப்பமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் இருக்கவே இருக்கு அசத்தும் சுவையில் செட்டி நாடு ஸ்பெஷல் பக்கோடா குழம்பு செய்து பாருங்க. எப்படி செய்வது என பார்க்கலாம்.

சாம்பார், குழம்புன்னு சாப்பிட்டு போரடிக்கிறதா.. இந்த செட்டி நாடு ஸ்பெஷல் பக்கோடா குழம்பை டிரை பண்ணுங்க.. டேஸ்ட் அசத்தும்
சாம்பார், குழம்புன்னு சாப்பிட்டு போரடிக்கிறதா.. இந்த செட்டி நாடு ஸ்பெஷல் பக்கோடா குழம்பை டிரை பண்ணுங்க.. டேஸ்ட் அசத்தும் (Hema's Kitchen / facebook)

பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 5 ஸ்பூன்

கடலை பருப்பு 10 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 8

பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு ஏற்ப

குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை -1 ஸ்பூன்

வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் -10

பச்சை மிளகாய் - 5

சோம்பு - 1 ஸ்பூன்

கசகசா- 1 ஸ்பூன்

முந்திரி பருப்பு-5

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய்

பட்டை - துண்டு

ஏலக்காய் - 3

சோம்பு - 1 ஸ்பூன்.

செய்முறை

துவரம் பருப்பு கடலை பருப்பை 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

வெங்காயம் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு முந்திரிபருப்பு, சோம்பு, பொரிகடலை, கசகசா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்க வேண்டும்.

பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இதில் சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் ஏற்கனவே வதக்கி அரைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும் அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து விட வேண்டும்.

ஏற்கனவே ஊற வைத்த கடலை பருப்பு, துவரம் பருப்பு, சோம்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அதில் கறிவேப்பிலை, மல்லி இலைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு குட்டி கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பக்கோடா போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் பொரித்த பக்கோடாக்களை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் குழம்பில் மல்லி இலையை தூவி ஆற வைக்க வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.