சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!

சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Nov 04, 2024 05:06 PM IST

சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ், செவ்வாழை குழிப்பணியாரம். குதிகால் வலியைப் போக்கும் திறன் கொண்டது. இதோ ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!
சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!

செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, தேவையற்ற நொருக்குத்தீனிகள் உட்கொள்வதை தடுக்கிறது. இதனால் உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப் போக்குகிறது. செவ்வாழையில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. செவ்வாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6, உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலியை குறைக்கிறது. இந்த செவ்வாழையைப் பயன்படுத்தி பணியாரம் செய்யமுடியும். அது சுவையான ஒரு மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

செவ்வாழை – 2

அரிசி மாவு – ஒரு கப்

ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

நெய் – தேவையான அளவு

வெல்லம் – அரை கப்

செய்முறை

வெல்லத்தை பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவேண்டும்.

செவ்வாழைப்பழங்களை உரித்து, சிறு துண்டுகளாக்கி, நன்றாக ஸ்மாஷ் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதில் ஒரு கப் அரிசி மாவை சேர்த்து நனறாக கலந்துகொள்ளவேண்டும்.

பின்னர் வெல்லப்பாகை சேர்க்கவேண்டும். சிட்டிகை உப்பையும் அதில் தூவி விடவேண்டும். வெல்லம் சேர்க்கும் பலகாரங்கள் அனைத்திலும் உப்பு சேர்த்தால்தான் இனிப்பின் சுவையை அது அதிகரித்துக் காட்டும்.

கடைசியாக தேங்காய் துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து ஒரு முறை கலந்துவிட்டுக்கொள்ளவேண்டும்.

தேவைப்பட்டால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றையும், எள்ளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் தேவையில்லை.

தேங்காயை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம். அப்படியேயும் சேர்க்கலாம். சேர்த்த அனைத்தையும் கலந்து விட்டு மாவை சிறிது நேரம் 10 நிமிடம் மூடி வைத்துவிடவேண்டும்.

இதை பணியார சட்டியில் நெய் சேர்த்து சிறு சிறு பணியாரங்களாக ஊற்றி எடுக்கவேண்டும். இதை நீங்கள் அப்பமாகவும் செய்யலாம். அதற்கு எண்ணெய் சட்டியில் ஊற்றி எடுக்கவேண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.