Health Tips: எள்ளுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips: எள்ளுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

Health Tips: எள்ளுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

I Jayachandran HT Tamil
May 17, 2023 10:31 PM IST

எள்ளுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

எள்ளும் வெல்லமும்
எள்ளும் வெல்லமும்

எள்ளும், வெல்லமும் ஆயுர்வேதத்துடன் தொடர்புடையவை. இவ்விரண்டு பொருட்களையும் பயன்படுத்தி செய்யப்படும் எள்ளுருண்டைகளை நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இந்த எள் மற்றும் வெல்லம் தரும் ஆரோக்கிய நன்மைகளை உணவியல் நிபுணரான ஷிகா ஏ ஷர்மா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

நிறைவுறா கொழுப்பின் நல்ல ஆதாரம்-

எள்ளில் நிறைவுறா கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த வகை கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலுடன் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். எள் மற்றும் வெல்லத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் -

எள் மற்றும் வெல்லம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் . இதனை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளும் பொழுது சிறந்த பலன்களை பெறலாம். இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. இல்லை எனில் ரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்கும் -

கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் எள் மற்றும் வெல்லத்தை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். இது மருந்துக்கு மாற்று அல்ல, இருப்பினும் இக்கலவையை சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

இரும்புச்சத்து நிறைந்தது-

எள் மற்றும் வெல்ல கலவை ரத்த சோகை பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும், ரத்த சோகையிலிருந்து விடுபடவும் இது உதவும். இது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் அதிக நன்மைகளை தரும்.

எடை இழப்புக்கு உதவும்

எள் மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். இதனைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியை நீங்கள் சாப்பிடலாம். இது உங்களை நீண்ட நேரத்துக்கு நிறைவாக வைத்திருக்கும். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைத்து, எடை இழப்புக்கும் வழிவகுக்கும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இக்கலவையை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

எள் மற்றும் வெல்லத்தை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் மிகச்சிறந்த நன்மைகளை பெற முடியும். அதேசமயம் அதிகமாக எடுத்துக் கொள்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.