தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ghee: மழை காலத்தில் நெய் சாப்பிடுவது நல்லதா?

Ghee: மழை காலத்தில் நெய் சாப்பிடுவது நல்லதா?

Aarthi V HT Tamil
Jul 31, 2023 12:26 PM IST

நெய் சாப்பிடுவதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

நெய்
நெய்

ட்ரெண்டிங் செய்திகள்

எதிர்ப்பு சக்தி

நெய்யில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் கொழுப்பில் கரையக்கூடிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மற்ற உணவுகளில் இருந்து உடல் உறிஞ்சப்படும். நாம் இதை பருப்பு வகைகள், காய்கறிகள் அல்லது இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.

செரிமானம்

மழை காலத்தில் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது செரிமான அமைப்பில் வாய்வு போன்ற பல வயிற்றுப் பிரச்னைகள் தொந்தரவு செய்கின்றன. நெய் சேர்ப்பதால் செரிமானம் மேம்படும். செரிமான மண்டலத்தில் ஆரோக்கியமான பாக்டீரியாவை அதிகரிக்க உதவுகிறது. இது குமட்டல், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்னைகளை நீக்கும்.

நெய்யில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனால் கொழுப்பு திசுக்கள் குறைந்து, எடையும் குறையும்.

சருமம்

நெய் சருமத்தை மென்மையாக்கி, நீரேற்றமாக வைத்திருக்கிறது. பொதுவாக ஈரப்பதமான பருவத்தில் ஏற்படும் பருக்கள் பிரச்னையை நீக்குகிறது. இது சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும். கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை ஒளிரச் செய்கிறது. கருவளையங்களை நீக்குகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்