மணமணக்கும் மிளகு மட்டன் குழம்பு; நாவூறும் சுவையில் எப்படி செய்வது என பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மணமணக்கும் மிளகு மட்டன் குழம்பு; நாவூறும் சுவையில் எப்படி செய்வது என பாருங்கள்!

மணமணக்கும் மிளகு மட்டன் குழம்பு; நாவூறும் சுவையில் எப்படி செய்வது என பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 01, 2024 04:22 PM IST

மிளகு மட்டன் குழம்பு, மணமணக்கும், நாவூறும் சுவையில் எப்படி செய்வது என்று பாருங்கள். இங்கு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

மணமணக்கும் மிளகு மட்டன் குழம்பு; நாவூறும் சுவையில் எப்படி செய்வது என பாருங்கள்!
மணமணக்கும் மிளகு மட்டன் குழம்பு; நாவூறும் சுவையில் எப்படி செய்வது என பாருங்கள்!

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

பட்டை – 1

கிராம் – 2

ஏலக்காய் – 1

அன்னாசி பூ – 1

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 1

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 6 பற்கள்

மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 3

செய்முறை

தேங்காய் துருவல் 3 ஸ்பூன் எடுத்து முதலில் அதை மட்டும் தனியாக பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைக் கிலோ மட்டனைக் கழுவி நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். கழுவி சுத்தம் செய்த மட்டனில் தேவையான நீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு, 4 முதல் 8 விசில்கள் வரும்வரை வேகவிடவேண்டும். வெந்த பின்னர், தண்ணீரை மட்டும், வடித்துவிட்டு, மட்டனை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை தனியாக வைத்துக்கொள்வேண்டும். மிக்ஸியில் 1 அன்னாசிப்பூ, 4 கிராம்பு, 4 ஏலக்காய், சீரகம் 1 ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், 2 வரமிளகாய், 1 பட்டைத் துண்டு என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதை கடாயில் சேர்த்து வறுக்கவேண்டாம். பவுடர் அரைத்த பின்னர் அதை அப்படியே மிக்ஸியில் வைத்திருந்து இந்தப் பவுடரோடு பூண்டு 6 பற்கள், உரித்த முழு சின்ன வெங்காயம் 24, பச்சை மிளகாய் 1, 2 அங்குல தோல் சீவிய இஞ்சி எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கடாயை அடுப்பில் வைத்து அது சூடானவுடன், அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரியவிடவேண்டும். 3 வர மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவேண்டும். இதில் சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கொள்ளவேண்டும். தக்காளி குழையும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

தக்காளி குழைந்ததும் அரைத்த மசாலாவை இதில் சேர்த்து மல்லித்தூள் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் அரை ஸ்பூன் சேர்த்து பச்சை வாசம் போக 3 நிமிடங்கள் நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். இதை கிளறும்போது இது துவையல் போல ஆகிவிடும். இதில் இப்போது வெந்த மட்டனை சேர்க்கவேண்டும்.

இந்த மட்டனில் ஏற்கனவே மட்டன் வெந்த நீரும் சேர்த்து ஒன்றரை கப் நீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக ஒருமுறை கலக்கி அடுப்பை மிதமாக எரியவிட்டு குழம்பை 10 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

கொதித்தபின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மேலும் 2 நிமிடங்கள் குழம்பை கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும். இப்போது இதில் ஒன்றரை டீஸ்பூன் பெப்பர் போட்டு கறிவேப்பிலைகள் தூவி கலக்கி விடவேண்டும். சூப்பரான ருசியில் பெப்பர் மட்டன் குழம்பு தயார். இதை ஒருமுறை செய்தால், இதனை வாரா வாரம் உள்ளம் நினைக்கும்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யர்ம் ப்ரேம்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஆரோக்கிய குறிப்புகள், ரெசிபிக்கள் ஆகியவற்றை, தேர்ந்தெடுத்து தினமும் ஹெச். டி. தமிழ் வழங்கி வருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.