இந்த உடுப்பி ரசப்பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் ரசத்தின் மணம் ஊரையே கூட்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த உடுப்பி ரசப்பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் ரசத்தின் மணம் ஊரையே கூட்டும்!

இந்த உடுப்பி ரசப்பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் ரசத்தின் மணம் ஊரையே கூட்டும்!

Priyadarshini R HT Tamil
Oct 19, 2024 01:57 PM IST

இந்த உடுப்பி ரசப்பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் ரசத்தின் மணம் ஊரையே கூட்டும். இதை அரைத்து வைத்துக்கொண்டு நிம்மதியாகிவிடுங்கள்.

இந்த உடுப்பி ரசப்பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் ரசத்தின் மணம் ஊரையே கூட்டும்!
இந்த உடுப்பி ரசப்பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் ரசத்தின் மணம் ஊரையே கூட்டும்!

தக்காளி, புளி, மிளகு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு ஆகியவற்றை ஃபிரஷ்ஷாக அரைத்து, கரைத்து ரசம் செய்வது எளிதுதான் என்றாலும், நீங்கள் நல்ல ஒரு ரசப்பொடியை செய்து வைத்துவிட்டீர்கள் என்றால், அதை போட்டு நிமிடத்தில் தக்காளி மற்றும் புளியை கரைத்துவிட்டு, பூண்டை தட்டிப்போட்டு, தாளித்து ரசத்தை செய்து முடித்துவிடலாம். குறிப்பாக பணி செல்பவர்களுக்கு இது நல்ல தேர்வு. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற உடுப்பி ரசப்பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் ரசத்தின் வாசம் ஊரே மணப்பதுடன், சுவை ஆளைத் தூக்கும். உடுப்பி ரசப்பொடியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 100 கிராம்

வரமல்லி விதைகள் – 100 கிராம்

சீரகம் – 30 கிராம்

வெந்தயம் – 15 கிராம்

வர மிளகாய் – 20 – 25

கறிவேப்பிலை – 2 கொத்து

பெருங்காயத்தூள் – ஒன்றரை ஸ்பூன்

செய்முறை

இந்த உடுப்பி ரசப்பொடியை செய்ய கொஞ்சம் மெனக்கெடல் தேவை. ஏனெனில் கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடாடனவுடன் அதில் வரமல்லியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதே எண்ணெயில் சீரகத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து வெந்தயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை விடவேண்டும். பின்னர் வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து வர மிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் எஞ்சிய எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டையும் சேர்த்து வறுத்துக்கொள்ள எடுக்கவேண்டும். அனைத்தையும் வறுக்கும்போது மிகவும் கவனம் தேவை. அனைத்தையும் சரியான பதத்தில் வறுத்து எடுக்கவேண்டும். கருகிவிடாமல் குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும்.

வறுத்த அனைத்தையும் ஒன்று சேர்த்து ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் பொடியாக்கிவிடக்கூடாது. அதிகம் பொடியானால் அதன் சுவை மாறிவிடும். எனவே அரைக்கும்போது கவனம் தேவை.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு, நீங்கள் ரசம் வைக்கும்போது, புளி மற்றும் தக்காளியைக் கரைத்து அதில் இந்தப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கடாயில் தாளித்து, இந்த கலவையை சேர்த்து நுரை பொங்க இறக்கினால், சூப்பர் சுவையான உடுப்பி ரசம் தயார். இந்த ரசத்தின் மணம் தெருவையே கூட்டும். சுவை, ஆளையே அசத்தும். ஒருமுறை ருசித்து பாருங்களேன், நீங்களே நேரம் ஒதுக்கி இந்தப் பொடியை கட்டாயம் செய்து வைத்துக்கொள்வீர்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.