ஸ்டார் சோம்பு; நறுமணம் தரும் மசாலா மட்டுமல்ல; நல்ல ஆரோக்கியம் தரும் மருந்தும்! இதோ நன்மைகள்!
ஸ்டார் சோம்பு, நறுமணம் தரும் மசாலா மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியம் தரும் மருந்தும் ஆகும். இதன் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்டார் சோம்பு என்பது மிதமான இனிப்புச்சுவை கொண்ட நறுமணம் தரும் ஒரு மசாலாப்பொருள் ஆகும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளது. இது ஆஸ்துமா முதல் ஆர்த்ரிட்டிஸ் வரை குணப்படுத்துகிறது. இது பொதுவாக சமையலறையில் முழுதாக அல்லது இடித்து பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உணவுக்கு வித்யாசமான சுவையைக் கொடுக்கும். அத்துடன் நீங்கள் சமைக்கும் பிரியாணி, சூப், கேக், குக்கீஸ் என பரவலாக இனிப்பு மற்றும் காரம் என அனைத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள் ஆகும். சீனா முதல் வியட்நாம் வரை பரவியுள்ள இந்த தாவரம், பழமாக எடுத்து காயவைக்கப்பட்டு, ஸ்டார் சோம்புகள் எடுக்கப்படுகின்றன. இது உணவு மற்றும் மருந்து என இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டார் சோம்பில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிட்டாய்கள், ஆல்கஹால் பானங்கள மற்றும் பெர்ஃப்யூம்களில் பயன்படுத்தப்படுகிறது. சில மருத்துவ குணங்கள், சுவாசம், வயிற்று வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி ஆகியவற்றை தீர்க்க வல்லது. ஸ்டார் சோம்பில் உள்ள நற்குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
ஸ்டார் சோம்பில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடல் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. இது உங்கள் உடலுக்கு சேதங்களை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. புற்றுநோய், இதய கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.