Ellu Thuvaiyal : பாரம்பரிய முறையில் இப்படி எள்ளு துவையல் செய்து கொடுங்க.. ருசி அட்டகாசம்.. ஊட்டச்சத்து நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ellu Thuvaiyal : பாரம்பரிய முறையில் இப்படி எள்ளு துவையல் செய்து கொடுங்க.. ருசி அட்டகாசம்.. ஊட்டச்சத்து நிறைந்தது!

Ellu Thuvaiyal : பாரம்பரிய முறையில் இப்படி எள்ளு துவையல் செய்து கொடுங்க.. ருசி அட்டகாசம்.. ஊட்டச்சத்து நிறைந்தது!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 11, 2024 12:44 PM IST

Ellu Thuvaiyal Recipe: முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும். உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. பாரம்பரிய முறையில் ருசியான எள்ளு துவையல் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.

Ellu Thuvaiyal : பாரம்பரிய முறையில் இப்படி எள்ளு துவையல் செய்து கொடுங்க.. ருசி அட்டகாசம்.. ஊட்டச்சத்து நிறைந்தது!
Ellu Thuvaiyal : பாரம்பரிய முறையில் இப்படி எள்ளு துவையல் செய்து கொடுங்க.. ருசி அட்டகாசம்.. ஊட்டச்சத்து நிறைந்தது!

தேவையான பொருட்கள்

எள் -1/4 கப்

உளுந்து - 2 ஸ்பூன்

வர மிளகாய் - 6

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 10

உப்பு

புளி - சிறிதளவு

கடுகு - ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை

எண்ணெய் - 2 ஸ்பூன்.

பெருங்காய தூள்

செய்முறை

கால் கப் கருப்பு எள்ளை எடுத்து சூடான கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். எள் வறுக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் பொரிய ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விட வேண்டும்.

அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் 2 ஸ்பூன் உளுந்து சேர்த்து வறுக்க வேண்டும் உளுந்து பொன்னிறமாக மாற ஆரம்பிக்கும் போது அதில் 4 பூண்டு பற்களை சேர்த்து கொள்ளவும். பின்னர் 6 வர மிளகாயை சேர்த்து வறுக்கவும். இதையடுத்து 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக அதில் ஒரு சிறிய துண்டு அளவிற்கு புளியை சேர்க்க வேண்டும். அதில் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

உளுந்து நன்றாக சிவந்த பின்னர் அதில் 3 டேபிள் ஸ்பூன் தேங்காயை சேர்க்க வேண்டும். வதக்கி ஆற விட வேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களுடன் ஏற்கனவே வறுத்து எடுத்த எள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். கொஞ்சமாக நீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

அரைத்து எடுத்த துவையலை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பின்னர் தாளிப்பை துவையலில் சேர்த்தால் ருசியான எள்ளு துவையல் ரெடி

சூடான சாதத்தில் எள்ளு துவையலை சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.

இந்த எள்ளு துவையலில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்தால் எள்ளு சட்னி ரெடி. சூடான இட்லிக்கு எள்ளு சட்னி சரியான காமினேஷன். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். எள்ளு சட்னி குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.