chow chow chutney: கர்ப்பிணிகளே கால்களில் வீக்கமா இந்த சட்னியை மட்டும் மறக்காதீங்க!
பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் கை கால் முகம் வீங்குவது வழக்கம் தான். அதை தவிர்க்க உணவில் அதிக அளவில் நீர்க்காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சௌசௌ.
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும். இதற்கு பயந்து பலரும் மருத்துவரிடம் செல்கின்றனர். ஆனாலும் பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் இப்படி கை கால் முகம் வீங்குவது வழக்கம் தான். அதை தவிர்க்க உணவில் அதிக அளவில் நீர்க்காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சௌசௌ.
வெறும் 100 கிராம் சௌசௌவில் 17.8 சதவிகிதம் கார்போஹட்ரேட், 10.7 சதவிகிதம் ஸ்டார்ச், 5.4 சதவிதிம் புரதம், 6.7 சதவிகிதம் சுண்ணாம்பு சத்து, 4.8 சதவிகிதம் பாஸ்பரஸ், 9 சதவிகிதம் மாங்கனீசு போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.
இது இரத்த அழுத்தம், வயிற்று பிரச்சனை, கொழுப்பை குறைக்க உதவுவது என பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.
குறிப்பாக சௌசௌ கர்ப்பிணிகளின் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்த சௌ சௌவை எப்போதும் போல் குழம்பில் மட்டும் கலந்து கொள்ளாமல் இப்படி புது விதமாக சட்னி செய்து சாப்பிடலாம்
சௌசௌ சட்னிக்கு தேவையான பொருட்கள்
சௌசௌ-1
உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்
கடலை பருப்பு - 3 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 4
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லி தழை - 1 கைபிடி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
தேங்காய் - 2 பத்தை
சீரகம் - 1/2 ஸ்பூன்
செய்முறை
சௌ சௌவை தோல் சீவி நன்றாக கழுவ வேண்டும். பின் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி விட எடுத்துக்கொள்ள வேண்டும். பின் வாணலியில் 3 எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். முதலில் மிளகாய் வத்தலை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின் 3 ஸ்பூன் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள சௌ சௌவை வாணலியில் சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் 5 பல் பூண்டு, ஒரு கொத்து கருவேப்பிலை, 1 கை பிடி மல்லி தழை, மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தையும் சேர்த்த நன்றாக வதக்கி விட வேண்டும். வதங்கியவுடன் தேங்காயையும் சேர்த்து போட்டு வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின் அத்தோடு புளியை சேர்த்து கொள்ள வேண்டும். இப்படி வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் தேவையான உப்பை கலந்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பின் சிறிய தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இந்த சட்னி சுவையாக இருக்கும். இதை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். அத்தோடு உடலுக்கும் மிகவும் நல்லதாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்