Sundaikkai kuzhambhu: கொழுப்பை கரைக்க உதவும் பச்சை சுண்டக்காய் குழம்பு.. அசத்தல் சுவைல் இதோ!
கசப்பு உள்ள காய்களில் ஒன்று சுண்டைக்காய். அதில் எப்படி ருசியான குழம்பு செய்யலாம் என பார்க்கலாம் வாங்க
அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவையை அவ்வப்போது நம் உடலில் சேர்த்து கொள்வது நல்லது. அப்படி கசப்பு உள்ள காய்களில் ஒன்று சுண்டைக்காய். அதில் எப்படி ருசியான குழம்பு செய்யலாம் என பார்க்கலாம் வாங்க
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய்
சின்ன வெங்காயம்
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
தேங்காய்
சீரகம்
சோம்பு
வெந்தயம்
கடுகு
உளுந்தம்பருப்பு
பூண்டு
பெருங்காயம்
நல்லெண்ணெய்
புளி
செய்முறை
முதலில் பச்சை சுண்டைக்காயை நன்றாக தட்ட வேண்டும். பின்னர் அதை நன்றாக கழுவ கழுவ வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தேங்காய் , ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, 5 சின்ன வெங்கயாம் சேர்த்த மைய அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கழுவிய சுண்டைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். சுண்டைக்காய் நன்றாக வதங்கிய பின் அரை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ள வேண்டும்.
அதே எண்ணெய்யில் கால் ஸ்பூன் வெந்தயதை சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம்பருப்பை சேர்க்க வேண்டும். வெந்தயம் சிவந்து , கடுகு உளுந்தம் பருப்பு வெடித்த உடன் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.
அதில் ஒரு பழுத்த தக்காளியை நறுக்கி சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்த பின்னர் அதில் இரு கைபிடி அளவு பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். கூடவே சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் வதங்கிய சுண்டைக்காயை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். மேலும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூளையும் சேர்க்க வேண்டும். சுண்டைக்காயை மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்போது எலுமிச்சை அளவு ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து சேர்த்து கொள்ள வேண்டும்.
புளி தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே அரைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். தேங்காய் பச்சை வாடை போன பிறகு குழம்பு கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது அதில் ஒரு சின்ன துண்டு வெல்லத்தை தட்டி சேர்த்து கொள்ளலாம். (விருப்பம் இல்லாதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம்.)
கடைசியாக குழம்பை இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கலாம். அவ்வளவு தான் ருசியாக சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் சேர்த்து சம்பிட ருசி அருமையாக இருக்கும்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது.
சுண்டைக்காயின் நன்மைகள்
சுண்டைக்காயில் அதிக அளவில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இது மனித உடலில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும். வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வாய்ப்புண், கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும் .
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்