White Hair : நரை முடி எட்டிப்பாக்குதா.. கெமிக்கல் டை வேண்டாம்.. இந்த எண்ணெய்ய பயன்படுத்துங்க.. ரிசல்ட் அட்டகாசம்தா!-white hair thinner gray hair no chemical dye use this oil amazing results - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  White Hair : நரை முடி எட்டிப்பாக்குதா.. கெமிக்கல் டை வேண்டாம்.. இந்த எண்ணெய்ய பயன்படுத்துங்க.. ரிசல்ட் அட்டகாசம்தா!

White Hair : நரை முடி எட்டிப்பாக்குதா.. கெமிக்கல் டை வேண்டாம்.. இந்த எண்ணெய்ய பயன்படுத்துங்க.. ரிசல்ட் அட்டகாசம்தா!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 06, 2024 06:00 AM IST

White Hair : கடைகளில் நரைமுடி கண்ணுக்குத் தெரியாமல் இருக்க பல வகையான முடி சாயங்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றைப் பயன்படுத்தினால் கூந்தல் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஏனெனில் இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கூந்தலுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பவை.

White Hair : நரை முடி எட்டிப்பாக்குதா.. கெமிக்கல் டை வேண்டாம்.. இந்த எண்ணெய்ய பயன்படுத்துங்க.. ரிசல்ட் அட்டகாசம்தா!
White Hair : நரை முடி எட்டிப்பாக்குதா.. கெமிக்கல் டை வேண்டாம்.. இந்த எண்ணெய்ய பயன்படுத்துங்க.. ரிசல்ட் அட்டகாசம்தா!

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பதின்வயதினர் வரை நரை முடி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் முடி நரைப்பது முதுமையின் அறிகுறியாக இருந்த நிலையில், இன்றைய மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை காரணமாக தலைமுடி வேகமாக நரைக்க ஆரம்பித்து விடுகிறது.

ஹேர் டையில் ரசாயனங்கள்

கடைகளில் நரைமுடி கண்ணுக்குத் தெரியாமல் இருக்க பல வகையான முடி சாயங்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றைப் பயன்படுத்தினால் கூந்தல் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஏனெனில் இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கூந்தலுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பவை. ஹேர் டையில் ரசாயனங்கள் இருப்பதால் கடைகளில் வாங்கும் ஹேர் கலர்களை பலர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. நீங்களும் வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டு இயற்கையாக கருப்பாக மாற விரும்பினால், இந்த எளிய முறையை முயற்சிக்கலாம்.

கடுகு எண்ணெய் முடிக்கு நல்லது. இதில் உள்ள பொருட்கள் முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் மாற்ற உதவுகிறது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இந்த எண்ணெயை தலைமுடிக்கு தடவுவார்கள். இந்த எண்ணெயில் சில பொருட்களை எப்படி கலக்க வேண்டும் என்று பார்ப்போம்.

கடுகு எண்ணெயுடன் சில பொருட்களை கலக்க வேண்டும். இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது உங்கள் தலைமுடியை இயற்கையாக கருமையாக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்

கடுகு எண்ணெய் தயார் செய்ய, நீங்கள் கடுகு எண்ணெய் ஒரு கிண்ணம் எடுக்க வேண்டும். ஒரு துண்டு கற்றாழை, சில கறிவேப்பிலை, 2 வெங்காயம், 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் தேவை.

இந்த எண்ணெயைத் தயாரிக்க, கடுகு எண்ணெயை ஒரு இரும்பு பாத்திரத்தில் சூடாக்கவும். மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கலக்கவும். 10-15 நிமிடங்கள் சூடாக்கவும். பின்னர் அதை நன்றாக ஆற விடவும். ஆறிய பிறகு எண்ணெயை வடிகட்டி மற்றொரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த எண்ணெயை முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும். தேவைப்பட்டால் இரவில் எண்ணெய் தடவி காலையில் குளிக்கலாம். அல்லது எண்ணெய் தேய்து 2 மணி நேரம் கழித்து குளிக்கலாம். இந்த எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் மாற்ற உதவுகிறது. சிறந்த முடி பராமரிப்புக்கு , இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும். சில நாட்களில் நல்ல பலன்களை காண்பீர்கள்.

ரசாயனம் நிறைந்த கூந்தல் பொருட்களைப் பயன்படுத்துவதும் முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கூந்தல் பொருட்களில் உள்ள சல்பேட்டுகள் கூந்தலுக்கு சில நன்மைகளை அளித்தாலும், அவை கூந்தலை வறண்டு, உடையக்கூடியதாக மாற்றும். இது முடியை வெள்ளையாக மாற்றும். எனவே சல்பேட் இல்லாத முடி பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்யவும்.

முடிக்கு வெளியில் எண்ணெய் தேய்ப்பது மட்டும் இன்றி சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

இது போன்ற பல தகவல்களை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.