TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம்: நடிகை அஞ்சனே கீர்த்தி-actress anjane keerthy talks about the stress faced by venkat prabhu in the goat - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thegreatestofalltime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம்: நடிகை அஞ்சனே கீர்த்தி

TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம்: நடிகை அஞ்சனே கீர்த்தி

Marimuthu M HT Tamil
Sep 03, 2024 06:47 PM IST

TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம் பற்றிப் பேசிய நடிகை அஞ்சனே கீர்த்தியின் பேட்டி குறித்து பார்ப்போம்.

 TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம்: நடிகை அஞ்சனே கீர்த்தி
TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம்: நடிகை அஞ்சனே கீர்த்தி

தி கோட் படத்தில் நடித்த நடிகை அஞ்சனே கீர்த்தி படம் குறித்து கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டயில் பேசுகையில், ‘’சில ஆண்டுகளுக்கு முன்பு, வெங்கட் பிரபு சாரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது விஜய் சாரை வைச்சு படம் எடுத்தால், நான் விஜய் சார் கூட நடிச்சே தீருவேன் அப்படின்னு சொன்னேன். அப்போது எல்லாம் வெங்கட் பிரபு, விஜய் சாரை வைச்சு படம் எடுப்பார்னு எல்லாம் தெரியாது. நான் விஜய் சாரோட தீவிர ஃபேன். தி கோட் படத்தில் என் ரோல் குறித்து எல்லாம் சொல்லமாட்டேன்.

விஜய் சாரிடம் எல்லாமே எனக்குப் பிடிக்கும். ரொம்ப பணிவானவர். அவர் இப்படி பார்த்தால் ஆயிரம்பேர் பார்க்கிறார்கள். நான் இந்தப் படத்தில் நடிச்சதுக்கு ரொம்ப சந்தோஷப்படுறேன். எனக்கு தெரிஞ்சு, வெங்கட் பிரபு சார் ஷாட் வைச்சதும் ஒரு சில ஷாட்ஸில் நடிச்சிகொடுத்திடுவேன். அவ்வளவுதான் முடிஞ்சிடுச்சான்னுற மாதிரி இருக்கும். ஒரே டேக்கில் ஓகேன்னா, நாம எதுவும் திருப்பிக் கேட்கிறது இல்லை.

தி கோட் படத்தில் விஜயகாந்த் சார், சிவகார்த்திகேயன், மைக்கேல் ஜாக்சன், வில்ஸ் ஸ்மித் சார் இருக்கலாம். இல்லாமலையும் இருக்கலாம்.

பவதாரிணியின் குரல் கேட்டு அழுதேன்: நடிகை அஞ்சனே கீர்த்தி

பவதாரிணி என்னோட ஃபிரெண்ட். அவரோட பாடலை ஏ.ஐ தொழில் நுட்பத்தில் கேட்டதும் இரண்டு நாட்களாக அழுதிட்டே இருந்தேன். ஆரம்பத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் நன்கு வரும் அப்படின்னு எல்லாம் தெரியாது. பாடலைக் கேட்டதும் மெய்சிலிர்த்துடுச்சு.

வெங்கட் பிரபு சாரின் படத்தில் எப்போதுமே ஃபன் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அதை எல்லாம் தாண்டி, சீரியஸாக அவர் வேலை பார்த்தார். எல்லோருக்கும் பிடிக்கவைக்கணும் அப்படி நினைக்கிறது ரொம்ப அழுத்தமான வேலை.

விஜய் சாரோட ரசிகர்களை திருப்திபடுத்துறது ஒரு பக்கம், மறுபக்கம், புரொடியூசரை திருப்திபடுத்துறது ஈஸி கிடையாது. இதற்கிடையே சோசியல் மீடியாவில் நடக்கிற சண்டை, படம் இயக்குறது, ரிலீஸ் தேதி கிடைக்கிறது இதை எல்லாம் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். ஓரளவுக்கு சூட்டிங் ஸ்பாட் கலகலப்பாக தான் இருந்தது. ஆனால், முழுக்க முழுக்க கலகலப்பாக இல்லை. கொஞ்சம் நார்மலாக தான் இருந்தது.

வெங்கட் பிரபுவுக்கு அவ்வளவு பிரசர்: நடிகை அஞ்சனே கீர்த்தி

வெங்கட் பிரபு சார் எவ்வளவு பிரசரில் வேலை பார்த்தாலும் அதை வெளியில் காட்டவே மாட்டார். மற்றவர்கள் என்றால், அப்படி இப்படி பேசுவாங்க. வெங்கட் பிரபு சார் ரொம்ப அமைதியான மனிதர்.

இதுவே பிரஷர் ஆன இயக்குநரிடம் வேலைசெய்தால், அது நடிகர்களிடமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், வெங்கட் பிரபு சார் அமைதியாக இருப்பதால், நடிகர்களும் அமைதியாக நடிப்பாங்க. ரொம்ப பிரஷர் காட்டினால், நடிகர் - நடிகைகளும் நன்றாக நடிக்கமாட்டாங்க.

வெங்கட் பிரபு, ரொம்ப பணிவானவர். ரொம்ப நல்லவர். மாநாடு படத்தில் சிம்பு தான், பிரேம்ஜிக்கு இந்தப் பொண்ணை கல்யாணம்பண்ணுறமாதிரி வைக்க சொன்னார். அதன்பின்னாடி, அவருக்கு நிஜமாகவே கல்யாணம் ஆகிடுச்சு.

பிரேம்ஜிக்கு கேர்ள் ஃபிரெண்ட் இருக்கிறது எல்லாம் முன்னாடியே எனக்குத்தெரியும். கொஞ்ச நாட்கள், நண்பர்களோட ஜாலியாகவே இல்லை. அப்போதே எனக்கு டவுட் இருந்துச்சு. கொஞ்சம் பிஸியாக இருக்கிற மாதிரியே காட்டினார். பிறகு தெரிஞ்சிருச்சு.

இதனிடையே அவர் உடல் கொஞ்சம் எடையைக் குறைச்சிட்டார்னு ஃப்ரெண்டாக இருக்கிறதால் கஷ்டமாக இருந்துச்சு. இப்போது அவருக்கு கல்யாணம் ஆனவுடன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என முடித்தார்.

நன்றி: கலாட்டா தமிழ்

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.