Benefits of Vallarai Keerai : மூளை, நரம்பியல் மருத்துவர் தேவையில்லை! வல்லாரைக்கீரை போதும்! முழு உடலுக்கும் நல்லது!
Benefits of Vallarai Keerai : மூளை, நரம்பியல் மருத்துவர் தேவையில்லை, வல்லாரைக்கீரை போதும். அபார நினைவாற்றல், முழு உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

வல்லாரைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால்தான் அது மருத்துவ மூலிகையாகும். நமது வீடுகளில் அடிக்கடி கூறுவார்கள், நினைவாற்றலை அதிகரிக்க, மூளையை சுறுசுறுப்பாக்க வல்லாரை கீரையை சாப்பிடவேண்டும் என்று, எனவே உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமெனில், அவர்களுக்கு வல்லாரைக்கீரையை கொடுக்கவேண்டும். இது மூளை மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தை காக்கிறது. அது மட்டுமின்றி மூட்டு வலி, அல்சர், மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குகிறது. இதன் அறிவியில் பெயர் சென்டெல்லா ஆசியாடிக்கா, தெற்கு ஆசியாவில் அதிகம் வளர்கிறது. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வளர்கிறது. சிறியவகை தாவரமாகும். பசுமையான இலைகளைக் கொண்டிருக்கும். இதன் தண்டுகள் சிவப்பு-பிரவுன் வண்ணத்தில் இருக்கும். வெள்ளை, பர்பிள் பூக்கள் இருக்கும். சிறிய உருண்டையான பழங்கள் தோன்றும்.
சுவையான வல்லாரை கீரை தென்னிந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை மசாலாக்கள், கூட்டு, பருப்பு என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். துவையல், சாலட், சூப், தோசைகளும் செய்து சாப்பிடலாம்.
