Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவேண்டுமா? அப்போ இந்த 4 விஷயங்கள மட்டும் கட்டாயம் செய்ங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவேண்டுமா? அப்போ இந்த 4 விஷயங்கள மட்டும் கட்டாயம் செய்ங்க!

Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவேண்டுமா? அப்போ இந்த 4 விஷயங்கள மட்டும் கட்டாயம் செய்ங்க!

Priyadarshini R HT Tamil
Jul 27, 2024 01:38 PM IST

Diabetes Remedy : நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? அதை கட்டுக்குள் வைக்க போராடுகிறீர்களா? அதற்கு இந்த 4 விஷயங்களை மட்டும் கட்டாயம் செய்யவேண்டும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதை கட்டாயமாக்கிவிட்டுதான் மருந்தும், வீட்டு மருத்துவ குறிப்புகளும் செய்ய வேண்டும்.

Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவேண்டுமா? அப்போ இந்த 4 விஷயங்கள மட்டும் கட்டாயம் செய்ங்க!
Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவேண்டுமா? அப்போ இந்த 4 விஷயங்கள மட்டும் கட்டாயம் செய்ங்க!

இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள், ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால் அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உள்ளன.

வழக்கத்தைவிட அதிக தாகம்

அதிக முறைகள் சிறுநீர் கழிப்பது

முயற்சியின்றி திடீரென உயிரிழப்பது

சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது.

(கிடோன்கள் என்பவை சதை மற்றும் கொழுப்பின் உடைந்த பாகமாகும். இவை உடலில் தேவையான அளவு இன்சுலின் இல்லாதபோது உடைகிறது)

சோர்ந்திருத்தல்

எரிச்சல் கொள்வது மற்றும் மனநிலையில் மாற்றம்

கண்கூச்சம் மற்றும் மங்கலாகத் தெரிவது

புண்கள் மற்றும் காயங்கள் தாமதமாக குணமடைவது

தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது. குறிப்பாக பற்களின் ஈறுகள், சருமம் மற்றும் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படுவது.

இவையனைத்தும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் குறிப்புகள்

நீங்கள் காலை எழுந்தவுடன் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் இனிப்பை சேர்க்கக் கூடாது. கார உணவுகளை மட்டும் எடுத்த்க்கொள்ளுங்கள். 

இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளுடன் சட்னி சேர்த்து உட்கொள்ளுங்கள். ஆப்பம், தேங்காய்ப்பால், இடியாப்பம், தேங்காய்ப்பால் என இனிப்பு உணவாக அது இருக்கவேண்டாம். இதை கட்டாயம் செய்யவேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் முன்னும், ஒரு டம்ளர் தண்ணீர் பருகவேண்டும். அதில் வினிகரை கலந்து பருகலாம் அல்லது நீங்கள் உட்கொள்ளும் காய்கறிகளில் வினிகரை கலந்து பருகலாம்.

பழங்களை கடித்து மென்று பழங்களாக சாப்பிடவேண்டும். பழச்சாறுகளாகவோ அல்லது உலர்ந்த பழங்களாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது.

தினமும் மதிய உணவு மற்றும் இரவு உணவு முடிந்த பின்னர் கட்டாயம் 10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள். சாப்பிட்டவுடன் வேகமாக நடக்கக் கூடாது. எனவே மெதுவாகத்தான் நடக்கவேண்டும்.

இந்த 4 குறிப்புகளும் மிகவும் முக்கியமானது. இவற்றை தினமும் செய்வதை உறுதிப்படுத்தினாலே உங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

இவற்றுடன் மருத்துவர் பரிந்துரைத்துள்ள மருந்துகளோ அல்லது வீட்டில் செய்யப்படும் மருத்துவ முறைகளையோ பின்பற்றினால் உங்கள் உடலில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கப்படும். நீங்கள் இதை பழக்கினாலே போதும், உங்களால் செய்யாமல் இருக்க முடியாது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.