Diabetes : சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழ்வியல் மாற்றங்கள் – ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!
Diabetes : வாழ்வியல் மாற்றங்களே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வில் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரைநோய் முந்தைய நிலையிலிருந்து சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சர்க்கரை நோய்
"Prevention of Diabetes from Pre-diabetes in real world setting in Sourh-India" என்ற தலைப்பில், "Diabetes and metabolic syndrome: Clinical Research and Reviews" எனும் ஆய்விதழில், மருத்துவர் விஜய் விஸ்வநாதன் மற்றும் குழுவினர், வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையிலிருந்து, (Pre-Diabetes) சக்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியுமா? என ஆராய்ந்ததில்,உணவு முறை மாற்றம் (உணவில் கலோரி அளவை குறைப்பது, பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்தை குறைப்பது-Reduction in intake of refined carbohydrates-அதிக சர்க்கரை, கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்து, நார்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது), உடற்பயிற்சி மேற்கொள்ளுவதால் (வாரத்திற்கு 150 நிமிடங்கள் நடப்பது, உட்கார்ந்தே வேலை செய்வதை குறைப்பது, பெரியவர்களுக்கு குறைந்தபட்ச உடற்பயிற்சியை அந்தந்த சூழுலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவது), சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்து சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதை கணிசமாக குறைக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.
ஆய்வுக்கு 25-65 வயதுள்ள 200 பேர் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 100 பேருக்கு (Control group) வழக்கமான சிகிச்சையும், எஞ்சிய 100 பேருக்கு (Intervention group) மேற்சொல்லப்பட்ட உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில், Control groupல் சர்க்கரைநோய் முந்தைய பாதிப்பிலிருந்து, சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படுவது 44.6 சதவீதம் என இருக்க, உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி செய்தவர்கள் மத்தியில், அது 7.9 சதவீதம் என மட்டுமே இருந்துள்ளது.
Control groupல் (உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் மேற்கொள்ளாதவர்கள்), சர்க்கரை நோய்க்கு முந்தைய நோய் நிலையில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு 6.2 சதவீதம் பேர் மட்டுமே திரும்பியுள்ள நிலையில், உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள்-Intervention group-மத்தியில் 34.9 சதவீதம் பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவும் (வெறும் வயிற்றில், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து), HbA1c அளவு Control groupல் மிக அதிகமாகவும், உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் மேற்கொண்டவர்கள் மத்தியில் அது குறைந்தும் காணப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் குறைப்பாடுகள் சில இருந்தாலும் (Not being a randomised controlled study), உடற்பயிற்சி, உணவு முறை மற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் முந்தைய நிலையில் இருந்து சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது.
உலகில், ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் அதிக உப்பு (Sodium) எடுத்துக்கொள்வதால் மடிகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (3-5 கிராம் சோடியம் மட்டுமே நாள் ஒன்றுக்கு உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்)
உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்வதால், ரத்தக்கொதிப்பு அதிகம் ஏற்படுவதோடு, நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உடல் பருமன் அதிகரிப்பு (Obesity), வயிற்றில் புற்றுநோய் (Gastric cancer), ஈரல் பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்படுகிது.
"உணவே மருந்து"எனும் நம் முன்னோர் சொல்லை நாம் மறக்கலாகுமா?
நன்றி – மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்