தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dhabha Style Egg Gravy : கமகம வாசனையுடன் ருசியான தாபா ஸ்டைல் முட்டைக்குழம்பு; ரைஸ், டிஃபன் இரண்டுக்கும் செம ஜோடி!

Dhabha Style Egg Gravy : கமகம வாசனையுடன் ருசியான தாபா ஸ்டைல் முட்டைக்குழம்பு; ரைஸ், டிஃபன் இரண்டுக்கும் செம ஜோடி!

Priyadarshini R HT Tamil
Oct 30, 2023 11:45 AM IST

Dhabha Style Egg Gravy : கமகம வாசனையுடன் ருசியான தாபா ஸ்டைல் முட்டைக்குழம்பு. ரைஸ், டிஃபன் இரண்டுக்கும் செம ஜோடி.

Dhabha Style Egg Gravy : கமகம வாசனையுடன் ருசியான தாபா ஸ்டைல் முட்டைக்குழம்பு; ரைஸ், டிஃபன் இரண்டுக்கும் செம ஜோடி!
Dhabha Style Egg Gravy : கமகம வாசனையுடன் ருசியான தாபா ஸ்டைல் முட்டைக்குழம்பு; ரைஸ், டிஃபன் இரண்டுக்கும் செம ஜோடி!

ட்ரெண்டிங் செய்திகள்

தக்காளி - 3

(ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளிகளை மையாக அரைத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும். 2 பெரிய வெங்காயத்தை கொற கொறப்பாக அரைத்து அதையும் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

முட்டை – 6

(முட்டைகளை அவித்து ஓடு நீக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டூத் பிக்கால் ஒவ்வொரு முட்டையிலும் முட்டை சிதையாமல் அம்மி கொத்துவது போல முட்டை முழுவதும் குத்திக் குத்தி விடவேண்டும். இது கிரேவி உள்ளே இறங்கி முட்டை முழுவதும் மசாலா சுவையுடன் இருக்க உதவுகிறது)

எண்ணெய் – தேவையான அளவு

(அடுப்பில் கடாயை 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் குறைவான தீயில், அவித்த முட்டைகளை போட்டு 2 - 3 நிமிடங்கள் வதக்கவேண்டும். முட்டையின் வெள்ளைப் பகுதி ஆங்காங்கே பொன்னிறம் ஆனதும் எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்)

சீரகம் – அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (கீறியது)

வர மிளகாய் -2

இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்

மல்லித்தழை – கைப்பிடி

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒன்றரை ஸ்பூன்

‘உப்பு – தேவையான அளவு

கசூரி மேத்தி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அதே கடாயில் மீதியுள்ள எண்ணெயில், சீரகம், பச்சை மிளகாய் வர மிளகாய் 2 கிள்ளி போட்டு தாளித்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி-பூண்டு விழுது ஒன்றரை ஸ்பூன் சேர்த்து 10 நிமிடங்கள் குறைவான தீயில் வதக்கி, வெங்காயம் பிரவுனாக மாறியதும் ஒரு கைப்பிடி நறுக்கிய மல்லித்தழைகள் போட்டு மேலும் வதக்கவேண்டும்.

மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும். அப்போதுதான், இது அடிபிடிக்காது. அடுப்பு குறைவான தீயில் இருப்பது நல்லது.

அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் இப்போது தண்ணீர் ஊற்றி கலக்கிவிட்டு கடாயை மூடி 10 நிமிடங்கள் வரை வேகவிடவேண்டும்.

பின் மூடியைத் திறந்து குழம்பில் அவித்த முட்டைகளைப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ஒருமுறை கலக்கி, மேலும் 3 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்கவிடவேண்டும்.

பின் மூடியைத் திறந்து, வறுத்து அரைத்த கசூரி மேத்தி தூவி கலக்கி அப்படியே குழம்பை மூடாமல் அடுப்பை குறைவான தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு, பின்னர் அணைத்துவிடவேண்டும். கமகமக்கும் மணத்துடன் ருசியான தாபா ஸ்டைல் முட்டைக் குழம்பு ரெடி.

பூரி, சப்பாத்தி, ரொட்டிகளுக்கு மட்டுமின்றி இட்லி, ஆப்பம், தோசை, இடியாப்பம், சோறு, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், அனைத்திற்கும் செம காம்போ இந்த க்ரேவி. ஒருமுறை சுவைத்தால் இதை மீண்டும் கட்டாயம் சுவைப்பீர்கள்.

நன்றி வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

WhatsApp channel

டாபிக்ஸ்