தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?

Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?

Priyadarshini R HT Tamil
Jan 06, 2024 12:46 PM IST

Dandruff Issues : பொடுகுத்தொல்லையால் அவதியென்றால், அதற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?
Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?

ட்ரெண்டிங் செய்திகள்

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் மசாஜ்

தேங்காய் எண்ணெய் இயற்கையிலே கூந்தலுக்கு நன்மை கொடுக்கக்கூடியது மற்றும் ஈரத்தன்மையை தக்கவைக்கும் தன்மைகொண்டது. கற்பூரத்தில் நுண்ணுயிர்களைக்கொல்லும் உட்பொருட்கள் உள்ளது. தேங்காய் எண்ணெய் கற்பூரத்தை கரைத்து மிதமான சூடாக்கி, உங்கள் தலையில் முடியின் வேர்களில் தடவிவிட்டு, அரை மணி நேரம் ஊறவிட்டு அலசலாம். இது ஒரு சிறந்த வழி.

ஆப்பிள் சைடர் வினிகர் வைத்து அலசுவது

ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீர் ஒரு டேபிள் ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தலைக்கு தலையில் ஷாம்பூ தேய்த்து குளித்தபின், இதை ஊற்றி தலையை நன்றாக அலச வேண்டும். இது தலைமுடியின் வேர்களில் பிஎச் அளவை சமப்படுத்தி, பொடுகை குறைக்கிறது.

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள குளுமைப்படுத்தும் தன்மை, தலைமுடியின் வேர்களில் உள்ள எரிச்சலை போக்கும் தன்மைகொண்டது. உங்கள் தலையில் கற்றாழையின் ஜெல்லை அப்படியே வைத்து தேய்க்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து அலசவேண்டும். கற்றாழையை நீங்கள் வீட்டில் வளர்க்கலாம். அதையே பயன்படுத்தலாம் அல்லது ஃபிரஷ் கற்றாழைகளையும் தனியாக வாங்கிகொள்ளலாம்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் பூஞ்ஜைகளுக்கு எதிராக செயல்படக்கூடியது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மைகொண்டது. இதை தேங்காய் எண்ணெயில் தடவி, முடியின் வேர்களில் தடவவேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அலசினால், பொடுகுத்தொல்லை நீங்கும்.

யோகர்ட் ஹேர் மாஸ்க்

யோகர்ட்டில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க உதவும். உங்களின் தலைமுடியின் வேர்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். வெறும் யோகர்ட்டை மட்டும் தலையில் மாஸ்க் போல் பூசி, 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசவேண்டும்.

எண்ணெய் கலவை

டீ ட்ரி எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய் ஆகிய எண்ணெய்களை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலை முடியின் வேர்க்கால்களில் தடவவேண்டும். இது உங்கள் தலையில் பொடுகை நீக்கி தலைமுடிக்கு ஆரோக்கியத்தை வழங்கும்.

வெந்தய பேஸ்ட்

வெந்தயத்தை ஓரிரவு நன்றாக ஊறவைத்து, அடுத்த நாள் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதை தலைமுடியின் வேர்க்கால்களில் தடவிவைத்து அலச வேண்டும். இது பொடுகை எதிர்த்து போராடும் மற்றும் உங்கள் தலை முடிக்கு ஊட்டமளிக்கும். இதை குளிர்காலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் குளிர் உடம்புக்காரர்களுக்கு இது சளியை ஏற்படுத்திவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கரைத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவவேண்டும். இதை அரைமணி நேரம் கழித்து அலசினால், உங்கள் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முடிக்கு ஊட்டமளிக்கும்.

ஜோஜோபா எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய் என்றவொரு எண்ணெய் கடைகளில் கிடைக்கும். அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இதை தலையில் தடவினால் இது முடி வறண்டுபோகாமல் இருக்க உதவும். இதனாலும் பொடுகு கட்டுப்படும்.

ஆரோக்கியமான உணவு

உடல், சருமம், தலைமுடி என எதன் ஆரோக்கியத்துக்கும் அடிப்படை ஆரோக்கியமான உணவு. எனவே ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டால் நல்லது. அது உங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் ஊட்டமளிக்கும். வைட்டமின்கள், மினரல்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பொடுகுத்தொல்லையும் கட்டுப்படுத்துகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்