Curry Leaves - Garlic Thokku : கருகரு நீள கூந்தல்; முடி உதிர்வுக்கு முற்று; ஆறு மாதம் கெடாது; கறிவேப்பிலை தொக்கு!-curry leaves garlic thokku long hair stop hair loss six months is not bad pick up the curry leaves - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves - Garlic Thokku : கருகரு நீள கூந்தல்; முடி உதிர்வுக்கு முற்று; ஆறு மாதம் கெடாது; கறிவேப்பிலை தொக்கு!

Curry Leaves - Garlic Thokku : கருகரு நீள கூந்தல்; முடி உதிர்வுக்கு முற்று; ஆறு மாதம் கெடாது; கறிவேப்பிலை தொக்கு!

Priyadarshini R HT Tamil
Sep 24, 2024 12:36 PM IST

Curry Leaves - Garlic Thokku : கருகரு நீள கூந்தல், முடி உதிர்வுக்கு முற்று, ஆறு மாதம் கெடாது கறிவேப்பிலை தொக்கை இப்படி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Curry Leaves - Garlic Thokku : கருகரு நீள கூந்தல்; முடி உதிர்வுக்கு முற்று; ஆறு மாதம் கெடாது; கறிவேப்பிலை தொக்கு!
Curry Leaves - Garlic Thokku : கருகரு நீள கூந்தல்; முடி உதிர்வுக்கு முற்று; ஆறு மாதம் கெடாது; கறிவேப்பிலை தொக்கு!

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 2 கைப்பிடியளவு

(கறிவேப்பிலையை நன்றாக அலசி சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்

வர மிளகாய் – 6

புளி – எலுமிச்சை அளவு

கல் உப்பு – தேவையான அளவு

(கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்)

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

வரமல்லி – ஒன்றரை ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

பூண்டு – 25 பல் (தோல் நீக்கியது)

செய்முறை 

கடாயில் வரமல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு என அனைத்தையும் சேர்த்து கடுகு வெடிக்கும்போது அடுப்பை அணைத்துவிட்டு, இறக்கி ஆறவைத்து காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், மிளகாய், புளி, கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

5 நிமிடம் அல்லது கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவேண்டும். வறுத்த இந்த பொருட்களையும், ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் தேவையான அளவு கல் உப்பையும் சேர்த்து அரைத்துவிடவேண்டும்.

இதை அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கக்கூடாது. நீங்கள் நீண்ட நாட்கள் இதை பாதுகாக்கவேண்டும் என்பதால், இதில் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். வெள்ளை பூண்டு பொன்னிறமாகும் வறுக்கவேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுது மற்றும் மசாலாப்பொடி சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் நன்றாக கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்துவரும்போது எடுத்தால் சூப்பர் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.

இந்த தொக்கு குறைந்தது ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இது உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற பயனுள்ள ரெசிபிக்கள் மற்றும் தகவல்களை உங்களுக்கு ஹெச்.டி தமிழ் அன்றாடம் தொகுத்து வழங்குகிறது. இதுபோன்ற பல்வேறு விவரங்களுக்கு எங்கள் இணையதளத்துடன் இணைந்திருங்கள். ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.