Pepper Kulambu : வாயில் எச்சில் ஊறும் சுவையில் மசாலா வறுத்து அரைத்த மிளகு குழம்பு! இதோ செய்முறை!-pepper kulambu a mouth watering spicy roasted and ground pepper gravy heres the recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pepper Kulambu : வாயில் எச்சில் ஊறும் சுவையில் மசாலா வறுத்து அரைத்த மிளகு குழம்பு! இதோ செய்முறை!

Pepper Kulambu : வாயில் எச்சில் ஊறும் சுவையில் மசாலா வறுத்து அரைத்த மிளகு குழம்பு! இதோ செய்முறை!

Priyadarshini R HT Tamil
Sep 03, 2024 01:08 PM IST

Pepper Kulambu : வாயில் எச்சில் ஊறும் சுவையில் மசாலா வறுத்து அரைத்த மிளகு குழம்பு, இதோ செய்வது எப்படி என்று பாருங்கள்.

Pepper Kulambu : வாயில் எச்சில் ஊறும் சுவையில் மசாலா வறுத்து அரைத்த மிளகு குழம்பு! இதோ செய்முறை!
Pepper Kulambu : வாயில் எச்சில் ஊறும் சுவையில் மசாலா வறுத்து அரைத்த மிளகு குழம்பு! இதோ செய்முறை!

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 4 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வரமிளகாய் – 5

மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 20

பூண்டு – 20

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புளிக்கரைசல் – ஒரு கப்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கல் உப்பு – 3 ஸ்பூன்

வெல்லம் – 2 ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், வரமல்லி, கடலை பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இவை சிறிது நேரம் வறுபட்டவுடன், பூண்டு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வறுக்கவேண்டும்.

பின்னர் நன்றாக ஆறியவுடன், முதலில் தூளாக அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்.

புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து புளிக்கரைசலை தயாரித்துக்கொள்ளவேண்டும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும்.

கடுகு பொறியத் துவங்கியவுடன், பெருங்காயத் தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அவை பொன்னிறமானவுடன், அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் அரைத்த மசாலா, தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்துவிட்டு குறைந்த தீயிலே அடுப்பை கொதிக்கவிடவேண்டும். சூப்பர் சுவையில் மிளகு குழம்பு தயார்.

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, தொட்டுக்கொள்ள அப்பளத்துடன் சாப்பிட சுவை அள்ளும். இதை உங்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்பட்டால் உடனே செய்துகொடுக்கலாம்.

காய்ச்சல் வந்தாலும் இதை செய்து சாப்பிட கசப்பான வாய்க்கு இதமாக இருக்கும். காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலும் பெருகும். இது குளிர், மழை காலத்துக்கு ஏற்ற குழம்பு ஆகும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.