Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!-cucumber salad want to avoid sun stroke this one salad is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
May 05, 2024 04:09 PM IST

Cucumber Salad : வெயில் காலத்துக்கு இப்டி ஒரு சிம்பிளான சாலட் செஞ்சு சாப்பிட உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கும்.

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!
Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

மல்லித்தழை – சிறிதளவு

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

வறுத்த கடலை – கைப்பிடியளவு

தேங்காய் துருவல் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

தயிர் – 2 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

நெய் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெள்ளரி பிஞ்சு, மல்லித்தழை, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு என அனைத்தும் சேர்த்து கலக்கவேண்டும்.

பின்னர் வறுத்த கடலையை பொடித்து சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.

கடைசியாக தயிர் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, கடுகு, சீரகம், உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இந்த சாலட்டில் சேர்க்கவேண்டும்.

அனைத்தையும் கலந்து சாப்பாட்டுடனும் பரிமாறலாம் அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

இந்த கோடை காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு.

வெள்ளரியின் நன்மைகள்

வெள்ளரியுடன் தேன், சாமந்தி அல்லது லாவண்டர் பூக்களை அரைத்து அதை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெரும். வெள்ளரியை ஃபிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து, அதை வெட்டி, கண்களில் வைத்தால் உடலை குளுமையாக்கும். முகத்துக்கு பொலிதரும். கண்களில் கருவளையங்களை குணமாக்கும்.

வெள்ளரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஃபோலேட் மற்றும் சிங்க் ஆகியவை நோய் எதிர்க்க உதவுகிறது.

வெள்ளரி சாப்பிடும்போது மன ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் கற்றல், கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது. 

இது உங்கள் மன தைரியத்தை அதிகரித்து, மனஅழுத்தத்தை சமநிலைப்படுத்தி, நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும். சவாலான நேரங்களில் இந்த வெள்ளரி சாப்பிட மனம் அமைதிபெறும்.

வெயிலால் ஏற்படும் வேனிற் கட்டிகளுக்கு வெள்ளரி மிகவும் சிறந்தது. இதை பேஸ்டாக்கி உங்கள் சருமத்தில் பூசினால், வேனிற்கட்டிகளை போக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

வெள்ளரி, கற்றாழை, தயிர் ஆகியவற்றை அரைத்து வேனிற்கட்டிகள் அல்லது வியர்குரு உள்ள இடத்தில் தடவவேண்டும். வெள்ளரியை பாலுடன் அரைத்தும் பூச பலன் கிட்டும்.

வெள்ளரி செரிமானம் மற்றும் வளர்சிதைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக கால்சியம் அதற்கு உதவுகிறது. 

வெள்ளரியில் உள்ள கால்சியச்சத்து செரிமானத்துக்கு மட்டுமல்ல, எலும்புகள் வலுப்பெறவும் உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், அமைப்புக்கும் உதவுகிறது.

வெள்ளரியில் உள்ள வைட்டமின் பி1, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரியில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது.

உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும். வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது. 

குறிப்பாக இன்றைய கடும் வெயிலுக்கு ஏற்படும் சன் ஸ்ரோக்கில் இருந்து விடுபட உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த வெள்ளரியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.