தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Curd Gravy : இப்டியெல்லாம் ஒரு சுவையான ரெசிபி இருக்க முடியுமா? உருளைக்கிழங்கு தயிர் குழம்பு செய்வது எப்படி?

Potato Curd Gravy : இப்டியெல்லாம் ஒரு சுவையான ரெசிபி இருக்க முடியுமா? உருளைக்கிழங்கு தயிர் குழம்பு செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
May 04, 2024 07:00 AM IST

Potato Curd Gravy : உருளைக்கிழங்கு தயிர் குழம்பு செய்வது எப்படி?

Potato Curd Gravy : இப்டியெல்லாம் ஒரு சுவையான ரெசிபி இருக்க முடியுமா? உருளைக்கிழங்கு தயிர் குழம்பு செய்வது எப்படி?
Potato Curd Gravy : இப்டியெல்லாம் ஒரு சுவையான ரெசிபி இருக்க முடியுமா? உருளைக்கிழங்கு தயிர் குழம்பு செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கிராம்பு – 2

பட்டை – சிறு துண்டு

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்

ஆம்ச்சூர் தூள் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு

தயிர் – கால் லிட்டர்

உப்பு – தேவையான அளவு

மாங்காய் தொக்கு அல்லது மாங்காய் ஊறுகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்

(புளிப்பில்லாத தயிரை சிறிது நீர் சேர்த்து லஸ்ஸி பதத்தில் நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேணடும்)

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிய கடலை மிட்டாய் அளவில் நறுக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், கிழங்கைப் போட்டு வெளிர் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியே வைக்கவேண்டும்.

அதே கடாயில், எஞ்சிய எண்ணெய்யை சேர்த்து சூடாக்கி, கடுகு, கிராம்பு, பட்டை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரிய வதக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து பச்சை வாசம் போக சில நிமிடங்கள் வதக்கவேண்டும்.

பின்னர் மல்லித்தூள், மஞ்சள் தூள், ஆம்சூர் பொடி மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும். இந்த மசாலா நன்றாக வேகும் வரை வதக்கி அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

இதே சூட்டில் கலக்கி வைத்த தயிரைச் சேர்த்து நன்றாக கலக்கவும் பின்னர் வறுத்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தூள் மற்றும் மல்லித் தழைகளை சேர்க்கவேண்டும்.

இதன் மேல் மாங்காய் தொக்கை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவேண்டும்.

அனைத்து வகை சோறு மற்றும் ரொட்டி வகைகளுக்கும் அற்புதமான சைட்டிஷ். அடை தோசைக்கும் பெஸ்ட் காம்போ.

குறிப்புகள்

தயிர் சேர்த்துக் கிளறும்போது அடுப்பு எரியக்கூடாது. மசாலா கிளறிய சூட்டிலேயே தயிர் சேர்த்தால் போதும். தயிரும் அன்றைய தயிராக இருக்கவேண்டும். புளிக்கக்கூடாது.

தயிர்க்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் உங்கள் தேவைக்கு சிறிது வெந்நீர் ஊற்றி கலக்கி உப்பு சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.

பேபி பொட்டேட்டா எனில் முழுதாக 12 கிழங்குகளை சேர்க்கவேண்டும். தயிரில் சிறிது சீரகம் தாளித்து சேர்ப்பது கூடுதல் ருசி தரும்.

பிரியாணி, தக்காளி போன்ற மசாலா கலந்த சாதங்களுக்கும் இந்த க்ரேவி அல்டிமேட்டாக பொருந்தும்.

வீட்டில் பஜ்ஜி வகைகள் எது செய்தாலும் அதற்கும் இதை தொட்டுக் கொள்ளலாம். ருசி பிரமாதமாக இருக்கும்.

வழக்கம்போல் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கும்.

உருளைக்கிழங்கு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அதில் என்ன டிஷ் செய்தாலும் காலியாகிவிடும்.

அதேபோல், இந்த குழம்பும் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கும். எனில் யோசிக்காமல் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

உருளைக்கிழங்கிலும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் நிறைந்தது, என்பதால், இது ஆரோக்கியமான ஒன்றும் கூட.

நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம். 

WhatsApp channel

டாபிக்ஸ்