தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Tikka Masala : இந்த ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து இந்த சண்டேவ கொண்டாடுங்க!

Chicken Tikka Masala : இந்த ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து இந்த சண்டேவ கொண்டாடுங்க!

Priyadarshini R HT Tamil
Nov 05, 2023 11:30 AM IST

Chicken Tikka Masala : இந்த ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து இந்த சண்டேவ கொண்டாடுங்க!

Chicken Tikka Masala : இந்த ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து இந்த சண்டேவ கொண்டாடுங்க!
Chicken Tikka Masala : இந்த ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து இந்த சண்டேவ கொண்டாடுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தூள் – 1 ஸ்பூன்

சீரகத்தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலா – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

வெந்தய கீரை – அரை ஸ்பூன்

கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தயிர் – இரண்டரை டேபிள் ஸ்பூன்

வறுத்த பொட்டுக்கடலைப்பொடி – ஒன்றரை ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்

(இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து சிக்கனை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

ஏலக்காய் – 2

கிராம்பு – 4

பூண்டு – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது) ‘

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (அரைத்த விழுது)

கொத்தமல்லித்தூள் – 1 ஸ்பூன்

சீரகத்தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கசூரி மேத்தி – 1 ஸ்பூன்

சாட் மசாலா – ஒரு சிட்டிகை

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

ஃபிரஷ் கிரீம் – 2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

10 முந்திரி மற்றும் ஒரு ஸ்பூன் கசகசா இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துகொள்ள வேண்டும்.

ஊற வைத்த சிக்கனை கிரில் பேனில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, மிளகு, சீரகம், ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து, பொடியகா நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய அனைத்தும் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்தது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்னர் தக்காளி பொடியாக நறுக்கியது மற்றும் தக்காளி அரைத்த விழுது சேர்த்துக்கொண்டு வதக்கவேண்டும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கொத்தமல்லித்தூள், சாட் மசாலா மற்றும் கசூரி மேத்தி ஆகிய அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் கிரிலில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக வெந்தவுடன், எலுமிச்சை சாறு, ஃபிரஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும்.

சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா சாப்பிட தயாராக உள்ளது.

WhatsApp channel