தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Knee Pain Home Remedies: இதை தவறாம செய்யுங்க..! மூட்டு வலி பாதிப்புக்கு வீட்டிலேயே எளிய தீர்வு

Knee Pain Home Remedies: இதை தவறாம செய்யுங்க..! மூட்டு வலி பாதிப்புக்கு வீட்டிலேயே எளிய தீர்வு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 04, 2024 06:00 PM IST

மூட்டுப் பகுதியில் லேசான வலி தொடர்ச்சியாக இருந்தால் அதற்கு வீட்டிலேயே நிவாரணம் அளிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மூட்டு வலி போக்க எளிய வழிகள்
மூட்டு வலி போக்க எளிய வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு அடுத்தபடியாக உடல் பருமன் மூட்டு வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது. உடலின் கூடுதலான எடை, மூட்டு இணைப்பு பகுதிகளில் சிரமத்தை அதிகரிக்க செய்யும். அதேபோல் விளையாடும்போது மூட்டு பகுதியில் காயம் ஏற்படுவதால் வலி உண்டாவது பொதுவான விஷயமாக உள்ளது.

வயதான காலத்திலும் நமது மூட்டு பகுதி வலுவாக உள்ளதா என்பதை உறுதி செய்ய, நாள்தோறும் உடற்பயிற்சி அல்லது உடல் ரீதியான செயல்பாடுகள் ஏதாவது தவறாமல் செய்ய வேண்டும். ஊட்டச்சத்துகள் நிறைந்து உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்களது எலும்புகள் வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். லேசான மூட்டு வலிகளுக்கு வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகளின் மூலம் நிவாரணம் பெறலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீங்கல் திடீரென கீழே விழுந்தாலோ அல்லது உங்களது கால் பகுதி வளைந்தாலோ RICE என்ற தெரபியை செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். RICE தெரபி என்ற கேள்விக்கு விளக்கமாக கூறுவதென்றால், Rest - ஓய்வு, Ice - ஐஸ்கட்டி ஒத்தடம், Compression with a bandage - பாண்டெஜ் மூலம் மூட்டு பகுதிக்கு ஒத்தடம் கொடுப்பது, Elevation over a pillow - தலையனை மேல் உயரமாக கால் வைப்பது. நீண்ட நாள்களாக முழங்கால் அல்லது மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அந்தப் பகுதி தசைகளை வலிமையாக வைக்கவும், அதை பராமரிக்கவும் உதவுகிறது.

அதேபோல் சைக்களிங், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அல்லது தண்ணீர் சார்ந்த உடற்பயிற்சி, யோகா பயிற்சி போன்றவை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. சூடான அல்லது குளிர்ச்சியான தெரபி (20 நிமிடம்), உடல் பருமன் இருப்பவர்கள் செய்வதால் மூட்டு வலி கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

மூட்டு வலி காரணமாக உங்களால் இயல்பாக நடப்பதிலோ அல்லது மாடி படிகளில் ஏறுவதிலோ சிரமம், சைக்கிள் ஓட்டுவதில் பிரச்னை இருந்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

நாள்தோறும் உடற்பயிற்சி

உடல் ரீதியாக எந்தவொரு செயல்பாட்டையும் வெளிப்படுத்தாதவர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உங்களுக்கு கீல்வாதம் அல்லது மூட்டு பகுதியில் காயம் இருந்தால் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காமல் உடல் இயக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசை பகுதிகள் வலுவடைந்து, அதன் இயக்கமும் அதிகரிக்கிறது. நடைப்பயிற்சி, யோகா, சைக்கிளிங், ஃபீட்னஸ் பயிற்சியாளர் மேற்பார்வையில் நீச்சல் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி என்றதும் மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளாமல், எந்த பயிற்சி உங்களுக்கு உடனடி பலனை தரும் என்பதை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு பின்னர் அதை பின்பற்றவும்.

உடல் எடை பராமரிப்பு

உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் கூடுதல் எடையை குறைக்க வேண்டும் என்பதை கவனித்தில் கொள்க. இதனால் உடலும் சரியான வடிவத்தை பெறும். உடல் பருமனாக இருப்பது மூட்டு இணைப்பு பகுதிகளில் கூடுதல் எடையை அதிகரிக்க செய்யும்.

சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடம்

அழற்சி எதிர்ப்பு விளைவு இருப்பதன் காரணமாக நீங்கள் சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடத்தை மேற்கொள்ளலாம். மூட்டு பகுதியில் வெப்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தசைகள் தளர்வடையவும், மூட்டுகள் விறைப்புத்தன்மை குறையவும் உதவுகிறது. எனவே சூடான தண்ணீர் பாட்டில் அல்லது வெப்பமான பட்டையை மூட்டு பகுதியில் வைத்தால் இதமாக இருக்கும்.

அதேபோல் ஐஸ் பேக் அல்லது ஐஸ் கட்டிகள் வைத்து குளிர்ச்சியான ஒத்தடமும் அளிக்கலாம். சுத்தமான துணியில் ஐஸ் க்யூப் வைத்து அதை மூட்டு பகுதியில் கட்டினால் வலி குறைவதோடு, வீக்கம், அழற்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மசாஜ்

மூட்டு வலியிலிருந்து விடுபட சுயமாக வலி உள்ள பகுதியில் மசாஜ் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது அதிக அழுத்தம் தரக்கூடாது. இதனால் வலி அதிகரிக்கவே செய்யும்.

எப்சம் உப்பு

இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால் வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது. எனவே நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிது அளவு எப்சம் உப்பு சேர்த்து, 15 நிமிடம் வரை ஊறவைக்கவும். பின் அதை மூட்டுப் பகுதியில் ஊற்றி ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்