Heatwave Alert: ’அடுத்த 2 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெப்ப அலைகள் வீசும்!’ இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வெப்ப அலை: ஒடிசா, வங்காளம், ஜார்க்கண்ட், விதர்பா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் யானம், ராயலசீமா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெப்ப அலைகள் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், விதர்பா, கர்நாடகா, கடலோர ஆந்திரா, ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகள் இந்த வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும், தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்ப அலை கூடும் என்றும் அதன் பிறகு இதன் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.