33 ஆண்டுகளுக்கு பிறகு..முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!
- Rajiv Gandhi Assassination Case: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து மூவரும் இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முருகன் மனைவி நளினி சென்னை விமான நிலையம் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தார். இதன்மூலம் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பின் மூவரும் தாயகமான இலங்கைக்கு திரும்புகின்றனர்.