8 வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா? ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் உணவு முறை! வாரம் முழுவதும் என்ன சாப்பிடணும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  8 வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா? ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் உணவு முறை! வாரம் முழுவதும் என்ன சாப்பிடணும்?

8 வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா? ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் உணவு முறை! வாரம் முழுவதும் என்ன சாப்பிடணும்?

Priyadarshini R HT Tamil
Dec 16, 2024 09:41 AM IST

ஊட்டச்சத்து நிபுணர் நேகா, ஒரு வாரத்துக்கான சைவ உணவுப்பட்டியலை பகிர்ந்துள்ளார். அதை பின்பற்றுவதன் மூலம் ஒரு வாரம் முழுவதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

8 வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா? ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் உணவு முறை! வாரம் முழுவதும் என்ன சாப்பிடணும்?
8 வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா? ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் உணவு முறை! வாரம் முழுவதும் என்ன சாப்பிடணும்? (Shutterstock)

அவர் பரிந்துரைக்கும் அந்த 7 நாள் உணவுத்திட்டம் என்ன?

முதல் நாள்

முதல் நாளை நீங்கள் ஓமம் தண்ணீருடன் துவங்கவேண்டும். அடுத்து நட்ஸ்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். காலை உணவாக கருப்பு சுண்டல் சாட், இடைவேளைக்கு வாழைப்பழம். மதிய உணவாக சாதம், கிரேவி, காய்கறிகள், தயிர், சாலட்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார். மோரும் இடையில் ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவில் முளைக்கட்டிய தானியங்கள் சாட், ஒரு டம்ளர் சூடான தண்ணீருடன் அந்த நாளை நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இரண்டாம் நாள்

காலையில் சீரகத்தண்ணீர் பருகவேண்டும். அடுத்து சூரிய காந்தி மற்றும் பரங்கி விதைகளை உட்கொள்ளவேண்டும். காலை உணவாக குயினோவா மற்றும் காய்கறிகள் கலந்த உப்புமா. பப்பாளி பழங்கள் சாப்பிடவேண்டும். மதிய உணவுக்கு, பருப்பு, குயினோவா, காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும். இளநீர் பருகவேண்டும். இரவு உணவாக கடலை மாவு அடையுடன் புதினா சட்னி சாப்பிடவேண்டும். இரவு ஒரு டம்ளர் சூடான தண்ணீருடன் நாளை நிறைவு செய்யவேண்டும்.

மூன்றாம் நாள்

காலையில் ஓமம் தண்ணீர், ஊற வைத்த பாதாம் 5 சாப்பிடவேண்டும். காலை உணவாக கடலை மாவு, கேரட் அடை மற்றும் காய்கறிகளும் சாப்பிடவேண்டும். அடுத்து ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். மதிய உணவாக காய்கறிகள் கிச்சடி, சிவப்பரிசி, பாசிப்பருப்பு கடையல் மற்றும் வெள்ளரி ரைத்தா எடுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த சன்னா 30 கிராம் சாப்பிடவேண்டும். இரவு உணவாக கம்பு ரொட்டியுடன் காய்கறி கிரேவி எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெய் சேர்க்காமல் ரொட்டி வார்க்கவேண்டும். இளஞ்சூடான் துளசி குடிநீரை பருகி நாளை நிறைவு செய்யவேண்டும்.

நான்காம் நாள்

ஓமம் தண்ணீரை முதலில் பருகவேண்டும். விதைகள் கலவையை சாப்பிடவேண்டும். காலை உணவாக வேகவைத்த ராஜ்மா மக்கானா சாட், அடுத்து கொய்யாப்பழம் எடுத்துக்கொள்ளவேண்டும். மதிய உணவுக்கு டோஃபூ, சாதம், பருப்பு சாப்பிடவேண்டும். மோர் குடித்துக்கொள்ளவேண்டும். இரவு உணவாக வேக வைத்த காய்கறிகள், கிரில்ட் பன்னீர், உறங்கச் செல்லும் முன் கிரீன் டீ குடித்துவிட்டு உறங்கவேண்டும்.

5ம் நாள்

காலையில் கழிவுநீக்க பானம் மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் கலந்து பருகவேண்டும். அதனுடன் நட்ஸ்கள் கலவை எடுத்துக்கொள்ளவேண்டும். காலை உணவாக ராகி இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி சாப்பிடவேண்டும். அடுத்து ஆப்பிள், மதிய உணவான சாதம் மற்றும் ராஜ்மா எடுத்துக்கொள்ளவேண்டும். முட்டைகோஸ் தொட்டுக்கொள்ளவேண்டும். ஃப்ளாக்ஸ் சீட் லட்டு சாப்பிடவேண்டும். இவை உங்களுக்கு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். இரவு உணவாக ராகி தோசை, தக்காளி சட்னி சாப்பிடவேண்டும். சீரகம், சோம்பு தேநீர் உறங்கச் செல்லும் முன் பருகவேண்டும்.

6ம் நாள்

வெந்தயத் தண்ணீருடன் நாளை துவக்கவேண்டும். அடுத்து விதைகள் கலவையை எடுத்துக்கொள்ளவேண்டும். ஓட்ஸ், பன்னீர் அடை சாப்பிடவேண்டும். அடுத்து வாழைப்பழம் எடுத்துக்கொள்ளவேண்டும். சாதம், கீரை, பருப்பு, சாலட் மதிய உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மாலை சிற்றுண்டி ராஜ்மா சாட், இரவு உணவாக மில்லட் புலாவ், இரவு உறங்கச் செல்லும் முன் வர மல்லி, சோம்பு, சீரக தேநீரை பருகவேண்டும்.

7ம் நாள்

சோம்பு டீ, பரங்கி விதைகள் காலையில் எடுத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகள் கடலைமாவு அடை, பன்னீர் அடை, கடலை சட்னி சாப்பிடவேண்டும். பேரிக்காய் சாப்பிடவேண்டும். மதிய உணவாக ராஜ்மா கிரேவி மற்றும் குயினோவா சாப்பாடு, எலுமிச்சை கலந்த காய்கறிகள் சாலட், வறுத்த கொண்டைக்கடலை சிறிதும் எடுத்துக்கொள்ளவேண்டும். இரவு உணவாக மல்டி கிரைன் ரொட்டியுடன் கத்தரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிடவேண்டும். சீரகத்தண்ணீர் பருகி அந்த நாளை முடித்துவிடவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.