Calcium Rich Foods : பால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையா? கால்சியம் பெறும் வேறு வழிகளும் உள்ளன!
Calcium Rich Food : பால் அல்லாத உணவுகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் வலுவான எலும்புகளை உருவாக்குகிறன்றன.

வலுவான எலும்புகளை உருவாக்கும் உணவுகள்
உங்கள் எலும்புகளை வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. ஒரு நாளைக்கு 700 மில்லிகிராம் கால்சியம் எடுக்கவேண்டியதும் அவசியம். அதற்கு நாம் பால் பொருட்கள்தான் உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. பால் அல்லாத கால்சியம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் எலும்புகளை வலுவானதாக்க உதவும்.
சியா விதைகள்
இந்த சிறிய விதைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியமும் உள்ளது. 100 கிராம் சியா விதையில் 631 கிராம் கால்சியச்சத்து உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸ் கால்சியம் அதிகம் உள்ள ஒரு உணவுப்பொருள் ஆகும். 100 கிராம் சோயாவில் 277 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பால் பொருட்களை தவிர்த்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சோயா பீன்ஸ் ஒரு சிறந்த தேர்வு.