Pepper Egg Recipe: புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை மிளகு மசாலா செய்வது எப்படி?
Recipe: பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அடித்த முட்டையை கடாயில் ஊற்றி அடுப்பை அதிக தீயில் வைத்து வேகவிடவும்.
புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றின் நன்மைகளால் நிரம்பிய உணவுப் பொருள் தான் முட்டை.
தினமும் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. மதியம் சாப்பாட்டுடன் ஒரு ஆம்ப்லேட்டும் சாப்பிடலாம். சரி முட்டையில் எத்தனையோ டிஷ்கள் செய்தாலும், டேஸ்டாக தான் இருக்கும். அந்த வகையில், முட்டை மிளகு மசாலா செய்வது எப்படி என பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
முட்டை - 5 அல்லது 6
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது இடித்தது
கறிவேப்பிலை
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
தனியா தூள் - 1 ½ டீஸ்பூன்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு மிளகு தூள் சேர்த்து கலந்துவிட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அடித்த முட்டையை கடாயில் ஊற்றி அடுப்பை அதிக தீயில் வைத்து வேகவிடவும். பிறகு நன்கு கலந்துவிடவும், முட்டை பாதி வெந்ததும் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
கடைசியாக சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும். முட்டை மிளகு மசாலா தயார். குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்