Watermelon seed benefits: தர்பூசணி விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 19, 2024

Hindustan Times
Tamil

சூரிய வெப்பத்தால் உடலில் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் வெப்பமும் கூடுகிறது. இதில் இருந்து நிவாரணம் பெற தர்பூசணி சாப்பிடலாம். 

pixa bay

கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், நீரிழப்பால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கோடையில் கிடைக்கும் சில பழங்கள் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் தர்பூசணியும் ஒன்று. ஆனால் நீங்கள் அவற்றின் விதைகளையும் பயன்படுத்தலாம்.

pixa bay

தர்பூசணி விதை தேநீர் குடிப்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சில தர்பூசணி விதைகளை பொடி செய்து  ஒரு லிட்டர் தண்ணீரில் சரியாக 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இப்படி மூணு நாள் எடுங்கள் ஒரு நாள் இடைவெளி கொடுங்கள். இதை மீண்டும் செய்யவும். இந்த குறிப்புகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

pixa bay

நீங்கள் ஆரோக்கியமான இதயத்தைப் பெற விரும்பினால், தர்பூசணி விதைகளை வேகவைத்து, அதன் நீரை தொடர்ந்து குடிக்கவும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

pixa bay

 தர்பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் இதயத்தைப் பாதுகாக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கை தீர்வாக அமையும்

pixa bay

நீங்கள் விரும்பும் அழகான, வலுவான கூந்தலைப் பெற தர்பூசணி விதைகள் உதவும். தர்பூசணி விதைகளை வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால், முடி சேதம் மற்றும் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். தர்பூசணி விதையில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சுருக்கம் இல்லாத சருமத்தை உங்களுக்கு வழங்கும். தர்பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர் அல்லது வேகவைத்த தண்ணீரில் தயாரிக்கப்படும் தேநீர் அருந்துவது பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.

pixa bay

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் தர்பூசணி விதைகள் அற்புதமாகச் செயல்படுகின்றன. தர்பூசணி விதைகளில் அர்ஜினைன் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுக்கிறது.

pixa bay

தர்பூசணி விதைகளில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எலும்புகள் மற்றும் திசுக்களை பலப்படுத்துகிறது.

pixa bay

தர்பூசணி விதைகளில் வைட்டமின் பி, நியாசின், ஃபோலேட், வைட்டமின் பி6 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு நியாசின் அற்புதங்களைச் செய்கிறது. தர்பூசணி விதைகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தர்பூசணி விதைகளை வேகவைத்த தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.

pixa bay

நீரேற்றத்தை அதிகரிக்கும்