நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றின் பயன்பாடு வேறுபட்டது. ஒவ்வொரு எண்ணெய்க்கும் நன்மை தீமைகள் உள்ளன. இரண்டு அல்லது மூன்று வகையான சமையல் எண்ணெய்களை ஒன்றாகப் பயன்படுத்துவது நல்லது

By Pandeeswari Gurusamy
Sep 30, 2024

Hindustan Times
Tamil

நிலக்கடலை எண்ணெய் இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய். இதில் MUFA உள்ளது, இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

ஆலிவ் எண்ணெய் விலை அதிகம். கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பைக் குறைக்கிறது. இரத்தம் உறைதல் அறிகுறிகளைக் குறைக்கிறது. இது வயிற்றில் கொழுப்பு சேர அனுமதிக்காது. சில வகையான புற்றுநோய், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

கடுகு எண்ணெயில் MUFA மற்றும் PUFA அதிகம் உள்ளது. இதில் எருசிக் அமிலம் என்ற ஆபத்தான பொருள் உள்ளது. மற்ற எண்ணெய்களுடன் இதைப் பயன்படுத்துவது நல்லது.

அரிசி தவிடு எண்ணெய்: மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது விலை சற்று குறைவு. MUFA அதிகமாக உள்ளது. இதுகொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதை கொண்டு செய்யப்படும் உணவுகள் நிலக்கடலை எண்ணெயை விட 12-25% குறைவான எண்ணெயை உறிஞ்சும்.

சூரியகாந்தி எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் PUFA அதிகமாக உள்ளது. அவை நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன.

பாமாயில்: PUFAகள் உள்ளன. இதில் லினோலிக் அமிலம் குறைவாக உள்ளது. எனவே இதை மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. ஆனால் கொலஸ்ட்ரால் இல்லை.

வெகுமதி தரும் கடன் அட்டைகள்