Eggless Omelet: இனி ஆம்லேட் போட முட்டை தேவை இல்லை! எக்லெஸ் ஆம்லேட் செய்வது எப்படி?
Eggless Omelet: அசைவ உணவுகளின் அதே சுவையை சைவ உணவுகளிலும் கொண்டு வருமாறு பல சமையல் முறைகள் வந்து கொண்டுள்ளன. அதன்படி சைவ உணவுப் பிரியர்களுக்கு சுவையான உணவை வழங்க முடியும்.
உலகில் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் பல உயிரினங்கள் உள்ளன. மனிதன் அனைத்து உணவுகளையும் சாப்பிடும் அணைத்துண்ணியாகவே அறியப்படுகிறான். இருப்பினும் ஒரு சில மக்கள் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகின்றனர். மேலும் மற்ற சிலர் வீகன் எனும் உணவு பழக்கத்தை கொண்டுள்ளனர். இதன் படி மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து வரை பாலை கூட உண்ண மாட்டார்கள். இருப்பினும் அசைவ உணவில் கிடைக்கும் சுவை சைவ உணவுகளில் இருப்பதில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. அசைவ உணவுகளின் அதே சுவையை சைவ உணவுகளிலும் கொண்டு வருமாறு பல சமையல் முறைகள் வந்து கொண்டுள்ளன. அதன்படி சைவ உணவுப் பிரியர்களுக்கு சுவையான உணவை வழங்க முடியும். அவ்வாறு முட்டை சாப்பிடாத ஆட்களுக்காக முட்டை இல்லாமல் ஆம்லேட் செய்யும் புதிய முறை தொடங்கி உள்ளது. அவ்வாறு முட்டை இல்லாமல் ஆம்லேட் செய்யும் முறையை தெரிஞ்சுக்க இத முழுசா படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கப் கடலை மாவு
ஒரு டிஸ்பூன் மைதா
அரை கப் தண்ணீர்
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
தேவையான அளவு உப்பு
2 வெங்காயம் ,
2 டீஸ்பூன் கொத்தமல்லி
1 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
அரை டீஸ்பூன் மிளகு
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். பின் அதில் கால் கப் அளவுள்ள கடலை மாவு, சிறிதளவு மைதாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மெதுவாக கலக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். மீண்டும் இதனை விஸ்க்கை கொண்டு மெதுவாக கலக்க வேண்டும். மேலும் 2 டீஸ்பூன் வெங்காயம், 2 டீஸ்பூன் கொத்தமல்லி, 1 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவை தோசை மாவு பதத்திற்கு வரும் வரை இதனை நன்கு கலக்கி விட வேண்டும். மென்மையான பதத்திற்கு வந்ததும் கலக்குவதை நிறுத்த வேண்டும்.
இப்போது கடாயில் ஒரு டிஸ்பூன் அளவுள்ள வெண்ணையை தடவி சூடு படுத்த வேண்டும். கடாய் நன்கு சூடானதும் கலக்கி வைத்த மாவு கலவையில் இருந்து ஒரு கரண்டி அளவுள்ள மாவை எடுத்து ஊற்ற வேண்டும். மேலும் மாவை நன்கு பரப்பி காய விட வேண்டும். இதன் மேல் மிளகை நன்கு இடித்து தூள் தூளாக தூவி விட வேண்டும். இதனை மிதமான சூட்டில் வேக விட வேண்டும். மறு பக்கமும் நன்கு வெகுமாறு திருப்பி போட வேண்டும். இதைப் போலவே கலக்கி வைத்திருந்த அனைத்து மாவையும் ஊற்றி சுட வேண்டும். இவ்வாறு சுட்டதும் அவை அனைத்தையும் தனியாக தட்டில் வைத்து பரிமாறலாம். சுவையான முட்டை இல்லாத ஆம்லேட் ரெடி. இதனை உங்கள் வீடுகளிலும் தயார் செய்து கொடுத்து அசத்துங்கள். சைவ உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆம்லேட்டாக இது இருக்கும்.
டாபிக்ஸ்