Black Rice Idly : வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற ஆரோக்கியமாக காலை உணவு எடுங்கள்! என்னவாக இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Black Rice Idly : வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற ஆரோக்கியமாக காலை உணவு எடுங்கள்! என்னவாக இருக்கும்?

Black Rice Idly : வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற ஆரோக்கியமாக காலை உணவு எடுங்கள்! என்னவாக இருக்கும்?

Priyadarshini R HT Tamil
Published Jul 02, 2024 04:31 PM IST

Black Rice Idly : வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற ஆரேக்கியமாக காலை உணவு எடுத்துக்கொள்ளுங்கள். அது என்னவென்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்துப்பாருங்கள்.

Black Rice Idly : வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற ஆரேக்கியமாக காலை உணவு எடுங்கள்! என்னவாக இருக்கும்?
Black Rice Idly : வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற ஆரேக்கியமாக காலை உணவு எடுங்கள்! என்னவாக இருக்கும்?

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி – 2 டம்ளர்

இட்லி அரிசி – 2 டம்ளர்

உளுந்து – ஒரு டம்ளர்

வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இரண்டு அரசிகளையும் சேர்த்து நன்றாக 6 அல்லது 7 முறை கழுவவேண்டும். பின்னர் அதை 6 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

உளுந்து இரண்டு மணி நேரம் மட்டும் ஊறினால் போதும். எனவே உளுந்தை அரிசி ஊறவைத்த 4 மணிநேரம் கழித்து ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சரியான அளவு நேரம் ஊறியவுடன் இரண்டையும் அலசி, மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து தனித்தனியான அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அரிசியை நைசாகவும், உளுந்தை பொசுபொசுவென பந்துபோல் பொங்கிவரும்வரையும் அரைத்துக்கொள்ளவேண்டும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்கவிடவேண்டும்.

8 மணிநேரத்துக்குப்பின்னர், மாவு புளித்து இருக்கும். அதை எடுத்து மிருதுவாகக் கலந்துவிட்டு, இட்லி பாத்திரத்தில் சேர்த்து இட்லியாக ஊற்றிக்கொள்ளவேண்டும்.

தண்ணீர் கொதித்த பின்னர்தான் மாவை வேகவைக்கவேண்டும். இட்லி வெந்தவுடன், அதை வெளியில் எடுத்து உடனே தட்டில் இருந்து பிரித்துவிடக்கூடாது. அதை ஆறவிடவேண்டும். ஆறவிட்டு எடுத்தால்தான் இட்லி உடையாமல் வரும்.

இந்த மாவிலே தோசையும் ஊற்றிக்கொள்ளலாம். தோசைக்கு மட்டும் தனியாக அரைத்தீர்கள் என்றால், அப்போது பச்சரிசியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். தோசை நன்றாக இருக்கும். இந்த மாவிலும் தோசை நன்றாக இருக்கும்.

மற்ற அரிசிகளைவிட, கருப்பு அரிசியில், அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் அரிசியில் 9 கிராம் புரதச்சத்து உள்ளது. மற்ற அரிசிகளில் 7 கிராம்தான் புரதம் உள்ளது. இதில் போதிய இரும்புச்சத்தும் உள்ளது. இரும்புதான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த முக்கியமான மினரல் ஆகும்.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்

45 கிராம் சமைக்காத கருப்பு கவுனி அரிசியில், 160 கலோரிகள், 1.5 கிராம் கொழுப்பு, புரதம் 4 கிராம், கார்போஹைட்ரேட்கள் 34 கிராம், நார்ச்சத்துக்கள் 1 கிராம், இரும்புச்சத்துக்கள் 6 சதவீதம் உள்ளது. இது புரதம், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நிறைந்தது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஆந்தோசியானின் என்ற தாவர உட்பொருட்கள் நிறைந்தது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள்

கண் ஆரோக்கியத்துக்கு உதவும்

இயற்கையில் குளூட்டன் இல்லாதது

உடல் எடை குறைக்க உதவுகிறது

ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

ஃபேட்டி லிவர் பிரச்னையை குறைக்கிறது

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.