Benefits of Black Rice : கண்களின் ரெட்டினாவை காப்பதுடன், எத்தனை நன்மைகளை கொடுக்கிறது இந்த கருப்பு கவுனி அரிசி!
Benefits of Black Rice : பாரம்பரியம் பாதுகாப்போம் என்ற இந்த புதிய தொடரில் நாம், தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மற்ற அரிசிகளைவிட, கருப்பு அரிசியில், அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் அரிசியில் 9 கிராம் புரதச்சத்து உள்ளது. மற்ற அரிசிகளில் 7 கிராம்தான் புரதம் உள்ளது. இதில் போதிய இரும்புச்சத்தும் உள்ளது. இரும்புதான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த முக்கியமான மினரல் ஆகும்.
45 கிராம் சமைக்காத கருப்பு கவுனி அரிசியில், 160 கலோரிகள், 1.5 கிராம் கொழுப்பு, புரதம் 4 கிராம், கார்போஹைட்ரேட்கள் 34 கிராம், நார்ச்சத்துக்கள் 1 கிராம், இரும்புச்சத்துக்கள் 6 சதவீதம் உள்ளது. இது புரதம், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நிறைந்தது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உடலை ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் அதிகரித்தால் உங்கள் உடலில் நாள்பட்ட நோய்கள் ஏற்படும். அது இதய நோய்கள், அல்சைமர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் மற்றும் சில புற்றுநோய்களும் ஏற்படும்.
மற்ற அரிசிகளைவிட கருப்பு கவுனி அரிசியில், அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதாக ஆரோய்ச்சிகள் கூறுகிறது. ஆந்தோசியனினுடன் கருப்பு கவுனி அரசியில், 23 தாவர காம்பவுன்ட்களுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளது. குறிப்பிட்ட சில வகை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் உள்ளன. இதனால் உங்கள் உடல் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
ஆந்தோசியானின் என்ற தாவர உட்பொருட்கள் நிறைந்தது
ஆந்தோனியானின், ஃபேளவனாய்ட் தாவர நிறமிதான் இந்த அரிசியின் அடர் பர்பிள் வண்ணத்துக்கு காரணமாகிறது. அதுவே ப்ளுபெரி மற்றும் பர்பிள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் நிறத்துக்கும் காரணமாகிறது.
ஆந்தோசியனின்களில் அழற்சிக்கு எதிரான குணம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. ஆந்தோசியனின் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் நாள்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கருப்பு கவுனி அரசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் இதய நோய்களுக்கு எதிராக இதயத்தை காக்கிறது. ஆந்தோசியானின் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள்
ஆந்தோசியானினில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. அதிகளவு ஆந்தோசியானின் எடுத்துக்கொள்வது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. மார்பக புற்றுநோய் செல்களை ஆந்தோசியானின்கள் குறைத்ததையும், அதன் வளர்ச்சியை மெதுவாக்கியதும் ஆய்வுகள் உறுதிப்படுத்தின.
கண் ஆரோக்கியத்துக்கு உதவும்
கருப்பு அரிசியில் அதிகளவில் லியூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவை உள்ளது. இவையிரண்டும் கரோட்டினாய்ட்கள், இவை கண் ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டவை. இவை ஆன்டி ஆக்ஸிடன்டகள் போல் செயல்பட்டு, கண்களின் சேதம் அடைவது தவிர்க்கப்படுகிறது.
லியூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ரெட்டினாவை, ஊதா ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. வயது தொடர்பான கண் பார்வை குறைபாட்டையும் சரிசெய்ய உதவுகிறது. கண்களில் கண்புரைநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
இயற்கையில் குளூட்டன் இல்லாதது
கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் குளூட்டன் இருக்கும். செலியாக் நோய் என்ற சிறுகுடலில் ஏற்படும் செரிமான கோளாறு என்பதாகும். இந்த நோய் உள்ளவர்கள் குளூட்டனை குறைக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அது நோய் எதிர்ப்புக்கு எதிரான செயல்ளை உடலில் தூண்டி சிறுகுடலை சேதப்படுத்துகிறது. குளூட்டன் கேஸ்ட்ரோஇன்டஸ்டைனல் பக்கவிளைவுளை ஏற்படுத்தும். அதனால் வலி, வயிறு உப்புசமும் ஏற்படும். பல தானியங்களில் குளுட்டன் இருந்தபோதும் கருப்பு கவுனி அரிசியில் அது இல்லை.
உடல் எடை குறைக்க உதவுகிறது
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் பசி குறைந்து வயிறு நிறைந்த உணர்வுடன் இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. இதில் உள்ள ஆந்தோசியனின் கொழுப்பு அளவை குறைக்கிறது என்று விலங்கு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. கருப்பு கவுனி மற்றும் பழுப்பு அரிசி இரண்டும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை குறைந்தது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து டைப் 2 டயாபடீஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ஃபேட்டி லிவர் பிரச்னையை குறைக்கிறது
கருப்பு கவுனி அரிசி எடுத்துக்கொள்வது, கல்லீரலில் சேரும் கொழுப்பை தடுத்து, ஆல்கஹால் பருகாமல் ஏற்படும் ஃபேட்டி லிவர் பிரச்னையை சரிசெய்கிறது.
இதில் கஞ்சி, பாயாசம், அல்வா என பல்வேறு உணவுகள் செய்து சாப்பிட் முடியும். அவற்றை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்